02/06/2024
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் மோரூர் மேற்கு ஊராட்சி *வேங்கிபாளையம்* பெரிய மாரியம்மன் சின்ன மாரியம்மன் 2-ம் ஆண்டு திருவிழா பற்றிய ஒரு சிறு உணர்ச்சி தொகுப்பு.
பாரம்பரியமாக நூற்றாண்டு காலமாக திருவிழா நடந்து வந்திருந்தாலும் கூட, அனைத்து சமுதாயத்திற்கும் பொதுவான மாரியம்மன் கோவிலாக இருந்தது.
பல்வேறு பேச்சு வார்த்தைகளுக்கு இடையே மகிழ்ச்சி யாக நிறைவுபெற்று நாட்டுகவுண்டர் *சமுதாயம் தனி கோயிலாகவும்,* சான்றோர் குல *நாடார் சமுதாயத்துடன், செட்டியார், நாய்க்கர், ஆசாரியார், பண்டாரத்தார் சமுதாயத்தினர் இணைந்து* மாரியம்மன் திருகோவில் பன்னொடு காலந்தொட்டு அமைய பெற்றிருந்த *பெரிய மாரியம்மன் சின்ன மாரியம்மன்* சாமிகளை அப்படியே நிலை நிறுத்தி இரண்டு கோயில்களாக அமைக்க பெற்றது.
இரண்டாவது ஆண்டு திருவிழா.
3. 1/2 ஆண்டு காலமாக கோயில் கட்டும் பணி நடைபெற்று 2022 ல் கும்பாபிஷேக நிறைவுபெற்று *2023ல் முதலாம் ஆண்டு திருவிழாவும் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக ஆண்டு நிறைவு விழாவும்* நிறைவு பெற்றது.
2024 இல் 2-ம் ஆண்டு திருவிழா சீரோடும் சிறப்போடும் நேற்றோடு நிறைவு பெற்று வருகை தந்து விழாவை கண்டு களித்து சிறப்பித்த உறவினர்களும், நண்பர்களும் வெளியூரில் இருந்து வருகை தந்து நமது மாரியம்மன் கோயிலுக்கு உட்பட்ட குடும்பத்தினரும் தங்களது பணி நிமித்தமாக மீண்டும் ஊர் திரும்ப புறப்படுகின்ற நிகழ்வு இன்று நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. (*ஆனந்த கண்ணீரில் ஊர் மக்கள் மற்றும் நானும்.*)
21.05.2024 செவ்வாய்க்கிழமை கம்பம் நடும் நிகழ்வு அதாவது மாரியம்மன் திருவிழா பூச்சாட்டுதல். தினசரி உள்ளூர் பெரியவர்கள், இளைஞர்கள், மகளிர்கள், பெண்கள், குழந்தைகள் சிரார்கள் உட்பட அனைவரும் ஆட்டக்காரர்களாக மாறி ஆடி மகிழ்ந்திட, 8 வது நாள் 28.05.2024 செவ்வாய்க்கிழமை மீண்டும் சத்து ஆபரணம் (சத்தாபரணம் பேச்சு வழக்கில் சத்தாவரம்) நிகழ்ச்சி அக்னிக்கரகம் எடுத்தல், அழகு குத்தி வருதல் என்று பயபக்தியோடு கிணற்றடியில் இருந்து கோயிலுக்கு ஊர்வலமாக வருதல் நிறைய பக்தர்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சாமி வருதல் அவர்களை மேற்பார்வையில் காயம் படாமல் கோயிலுக்கு வந்து சேர்த்துதல் என்று பக்தியும் பரவசமுமாக மற்றும் பாதுகாப்புடன் கலந்து இனிதே இரவு 10. 1/2மணி அளவில் நிறைவுற்றது.,
10வது நாள் வியாழக்கிழமை அதிகாலை பூலாம்பட்டி காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீர் அதாவது தீர்த்த குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சி. நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் சிறு சிறு குடங்களில் காவிரி நீர் எடுத்து வந்து அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் இருந்து
வேங்கிபாளையம் வந்தடைந்து பக்தி பரவசத்தோடு ஊர்வலமாக ஆட்டம் பாட்டத்துடன் வருகை தந்து திருக்கோயிலை அடைதல். பூலாம்பட்டியில் நமது உறவுகள் அனைவருக்கும் பிஸ்கட் தேநீர் வழங்கி உபசரித்தனர். நன்றி.
மதியம் ஓட்டுநர் சங்கத்தின் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் மற்றும் குறிப்பாக தினமும் அன்னதானம் நடைபெற்றது . ஒவ்வொரு சமுதாயம் சார்பிலும் இளைஞர்கள் பொதுமக்கள் சார்பிலும் நாடக மன்றம் சார்பிலும் முதல் நாளிலிருந்து புதன்கிழமை (ஒத்தை துடுப்பு) தவிர *அனைத்து நாட்களிலும் மிகச் சிறப்பாக அன்னதானம் நடைபெற்றது.*
அன்று மாலை 3 மணி அளவில் பொங்கல் வைத்து மாரியம்மனுக்கு படைத்தல் நிகழ்ச்சி, மாலை 7 மணி அளவில் இருந்து இரவு நிகழ்ச்சிகள் முடியும் வரை *பெரிய மாரியம்மன் மாவிளக்கு ஊர்வலம் முடிந்து, சின்ன மாரியம்மன் மாவிளக்கு ஊர்வலம்* மேளதாளங்களுடன் சிறப்பு நிகழ்ச்சியாக நிறைவு பெற்றது.
*ட்ரம் செட் இசை விருந்து* என்கிற நிகழ்ச்சி, இளைஞர்களும் இளம்பெண்களும், மகளிர்களும் உடன் ஆட்டக்காரர்களும் ஆடல் பாடல்கள் உடன் மிகச் சிறப்பாக நிறைவு பெற்று கோவில் வந்தடைதல்.
11-ம் நாள் அனைத்து மகளிர்களுடன் *முளைப்பாளிகை ஊர்வலம்* திருக்கோவிலுக்கு வருகை தந்து வழக்கம்போல் மாரியம்மனுக்கு பூஜை செய்து, கிடாய் வெட்டி பெரிய கம்பம் பக்கத்துக் கம்பத்துடன் மேற்கூறிய அனைவருடன் ஆட்டம் பாட்டத்துடன் கிணற்றடியில் சென்று கம்பம் விடுதல் நிகழ்ச்சி நிறைவு பெற்று மீண்டும் *(சோகத்துடன் வருதல் வழிமுறை வழக்கம்)*. கோவிலுக்கு திரும்பி வருகை தருதல்.
மீண்டும் பூஜை செய்து வழக்கம் போல் பூசாரியை வீட்டில் கொண்டு விட்டு விட்டு *அவர்கள் வீட்டில் தேநீர் , குளிர்பானம்* போன்றதெல்லாம் அருந்தி மகிழ்ந்து, அங்கிருந்து மஞ்சள் நீராட்டம் ஆரம்பிக்கப்பட்டு நமது மாரியம்மன் கோவில் எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மஞ்சள் நீராட்டம் மாமன் மைத்தனர்களுக்கு ஆண் பெண் வித்தியாசம் பார்க்காமல் ஒழிந்து மறைந்து மஞ்சள் நீர் ஊற்றி விளையாடுதல் சாயப் பவுடர்கள், சாணி, சேறு போன்ற நீர்நிலைகளில் வேண்டாம் என்று நிகழ்வுகளை கட்டுப்பாடு விதித்து வெறும் மஞ்சள் நீரில் மட்டுமே விளையாட வேண்டும் என்று அதையும் அனைவரும் கடைப்பிடித்து மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மாரியம்மன் கோவில் திருவிழாவில் முத்தாய்ப்பாக மாபெரும் நிகழ்ச்சியாக உள்ளூர் திரைக்கதை ஆசிரியர் சின்னத்திரையின் பல்வேறு தொலைக்காட்சிகளில் புகழ்பெற்ற அருமை தம்பி
*வே.கி. அமிர்தராஜ்* சிந்தனையில் உருவான *திரை 2* ( 8 ம் படைப்பு) என்கின்ற மேடை நாடகம், முன்னாள் நாடக நடிகரும் பாரம்பரிய கலை கூத்தாடி குடும்பத்தின் வாரிசுமான
*வி.ஆர்.கே. புஷ்பராஜ்* அவர்களின் இயக்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இடையில் ஒரு சிறு மழை வருகை தந்து ஒரு மணி நேரம் தடங்கல் ஏற்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டு மிகச் சிறப்பாக நாடகம் நிறைவு பெற்றது.
திருவிழா முடிந்தும் கூட மறுநாள் 12-ம் நாள் நிகழ்ச்சியாக காலை 9 மணியளவில் *வழுக்கு மரம் தழுவுதல்* போட்டி நமது மாரியம்மன் திருக்கோயில் எல்லைக்கு உட்பட்ட இளைஞர்களால் 3 நபர்கள் அணி அணியாக இணைந்து கண்ணுக்கு விருந்தாக கண்கொள்ளா காட்சியாக நிறைவு பெற்றது.
அன்று இரவு ஒரு 9 மணி அளவில் உள்ளூர் ஒளிப்பதிவாளர் (கேமராமேன்) தமிழ்நாடு முழுவதும் Add. என்று சொல்லக்கூடிய பல்வேறு விளம்பர நிகழ்ச்சிகளை எடுத்து புகழ் பெற்ற அருமை தம்பி *விஸ்வநாதன்வெங்கடாசலம்* அவர்களின் திரைக்கதை மற்றும் சிந்தனையில் வெளிப்பட்ட நிகழ்ச்சிகள் உள்ளூர் இளவரசிகள் உள்ளுர் ராசாக்களை மற்றும் பொது மக்களை நண்பர்களை வைத்து மிகச் சிறப்பாக ஒலி & ஒளிப்பதிவு செய்து எடிட்டிங் செய்து பின்னணியில் இசைகள், பாடல்கள் சேர்த்து நகைச்சுவை நிகழ்ச்சியாகவும், சண்டை காட்சிகளாகவும் இடை இடையே போர் அடிக்காமல் நிகழ்ச்சி கலகலப்பாக செல்ல மாரியம்மன் பூச்சாட்டிய நிகழ்விலிருந்து நிறைவு பெறுகின்ற நாள் வரை நேரில் வரமுடியாத பக்தர்களும் கண்டு களிக்கும் வண்ணம் அனைத்து நிகழ்ச்சிகளையும் கடந்த ஆண்டு *2023 மாரியம்மன் திருவிழாவின் ஹைடெக் நிகழ்ச்சிகளையும்* ஒளிபரப்பி மக்களின் ஆதரவை பெற்று இரவு 1.00 மணி அளவில் நிறைவு பெற்றது. திருவிழாவும்.
இத்தனையும் ஆர்ப்பாட்டங்கள் ஆரவாரங்களுடன் குடி வரிதாரர்கள் வரியாக வழங்கிய ரூ.3000/- நிர்வாகக் குழு இணைந்து மிக அருமையாக செயல்பட்டு திருவிழா நிறைவு செய்தது. வரி பணத்திலிருந்து திருவிழாவுக்கு மட்டுமே செலவு செய்யப்படுகிறது.
நாடகம், இசை மழை, ட்ரம் செட் எல்லாம் அந்தந்த குழுவினரால் நன்கொடை வசூல் செய்தும் அவரவர்களே முன்வந்து பணம் சேமிப்பு பங்களிப்பு செய்தும், பகிர்ந்தும் நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் ஊர் மூப்பர், கோமாளி வேடம், சின்ன மூப்பர் குடும்பத்தின் பங்கு, பக்கத்து கம்பத்தார், பூவோடு அக்னி வார்த்தல் பங்களிப்பு என பூசாரி குடும்பத்தினர்கள் அவர்களின் உறவினர்கள் என அனைவரின் ஒத்துழைப்பும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
நான் முதலில் சொன்னது போல மக்கள் ஊர் திரும்பும் நிகழ்ச்சி பரவசத்தோடு இன்று கட்டுரையை நிகழ்ச்சியின் உடைய சுருக்கத்தை நிறைவு செய்கின்றேன் நன்றி வணக்கம்.
*வி ஆர் கே புஷ்பராஜ் வேங்கிபாளையம்.*
குறிப்பு:- *இதில் குறைகள் ஏதாவது விடுதல் இருந்தால் தெரிவிக்கவும் சரி செய்து கொள்ளலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.*
தொகுப்பு
*வி.ஆர்.கே. புஷ்பராஜ்*