Vetri Vinayaga Pooja Store Nattu Marunthu Kadai,Thalaivasal.

  • Home
  • India
  • Salem
  • Vetri Vinayaga Pooja Store Nattu Marunthu Kadai,Thalaivasal.

Vetri Vinayaga Pooja Store Nattu Marunthu Kadai,Thalaivasal. Herbal Care Products ( Skin Care, Hair Care and Food Care Products)

நோய்_எதிர்ப்பு_சக்தியை_அதிகரிக்கும்_அருமருந்து* நிலவேம்பு இலைகள் காய்ச்சலைக் குறைக்கும்; பசி உண்டாக்கும்; உடல் தாதுக்களை...
25/05/2024

நோய்_எதிர்ப்பு_சக்தியை_அதிகரிக்கும்_அருமருந்து
* நிலவேம்பு இலைகள் காய்ச்சலைக் குறைக்கும்; பசி உண்டாக்கும்; உடல் தாதுக்களைப் பலப்படுத்தும். ஆரோக்கியம் தரும்; உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும்.
* பித்த நீர் உடலில் அதிகமானால் உடலில் பல நோய்கள் உருவாகிறது. இதனால் வாந்தி, மயக்கம் உண்டாகும். இவர்கள் நிலவேம்பு சமூலத்தை நிழலில் உலர்த்தி பொடி செய்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் பித்தம் குறையும்.
* காய்ச்சல் குணமாக நிலவேம்பு முழு தாவரத்தையும் சேகரித்து குடிநீர் செய்து 30 மிலி வீதம் காலை மாலை வேளைகளில் 3 நாள்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
* அடிக்கடி தலைவலியினால் அவதிப்படுபவர்கள் நிலவேம்பு கஷாயத்தை தினமும் இருவேளை அருந்தி வந்தால் தலைவலி நீங்கும். தலையில் நீர்க்கட்டு குறையும். தும்மல், இருமல் போன்றவை ஏற்படாது.
* காய்ச்சலைக் கட்டுப்படுத்த சுண்டைக் காய் அளவு நிலவேம்பு இலைப் பசையை காலை மாலை வேளைகளில் காய்ச்சல் தீரும் வரை சாப்பிட்டு வரவேண்டும்.
* தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் நிலவேம்பை காயவைத்து கஷாயம் செய்து அருந்தினால் தைராய்டு பாதிப்புகள் குறையும். மேலும் பெண்களுக்கு உண்டான சூதகக் கட்டி, கர்ப்பக் கட்டி, தேவையற்ற நீர் போன்றவற்றை நீக்கும்.
* நிலவேம்பு முழுத் தாவரத்தையும் உலர்த்திப் பொடி செய்து பத்திரப் படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். குளிக்கும் போது, தேவையான அளவு நீரில் குழைத்து பசையாக்கி உடலில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊற வைத்துக் குளிக்க வண்டுகடி, சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.

 #பாசிப்பருப்பு  இது தமிழ்நாட்டில் பாரம்பரியமாக பெண்கள் அழகுப்படுத்திக்கொள்ள பயன்படுத்தி வந்த பொடியாகும்.இப்போதுபோன்று ம...
13/05/2024

#பாசிப்பருப்பு
இது தமிழ்நாட்டில் பாரம்பரியமாக பெண்கள் அழகுப்படுத்திக்கொள்ள பயன்படுத்தி வந்த பொடியாகும்.

இப்போதுபோன்று முகத்தில் இறந்த செல்களை நீக்கவும், சன் டான் நீங்கவும், முகப்பருக்களை வெளியேற்றவும், முகத்தை பளபளப்பாகவும் வைத்திருக்க என்று தனி தனி பொருளெல்லாம் கிடையாது.

ஆனால் ஆச்சரியப்படுத்தும் விதமாக இந்த பாசிப்பருப்பு ஒன்றே இவை அனைத்தையும் செய்துவிடுகிறது என்பதால் பெரும்பாலும் இயற்கை அழகு கலை நிபுணர்கள் இதையே தேர்வு செய்கிறார்கள்.

பாசிப்பருப்பு ஆன்டிஆக்ஸிடண்ட் பண்புகளை கொண்டிருக்கிறது. இவை சருமத்தை சுத்தம் செய்து பளிச் என்று வைக்க உதவுகிறது.

தேவையற்ற முடிகளை அகற்ற உதவும் பொருள்களில் இதற்கும் முக்கிய பங்குண்டு. # Dharani Herbbals
See less
— feeling happy.

06/05/2024
ஆவாரம் பூ டீஇதயத்துக்கு ஆரோக்கியத்தை தரும்  #ஆவாரம்பூ_டீ-  #பயன்கள்: #மலச்சிக்கல்:மலச்சிக்கலை நாம் மிகச் சாதாரணமாக விட்ட...
04/05/2024

ஆவாரம் பூ டீ
இதயத்துக்கு ஆரோக்கியத்தை தரும் #ஆவாரம்பூ_டீ- #பயன்கள்:
#மலச்சிக்கல்:
மலச்சிக்கலை நாம் மிகச் சாதாரணமாக விட்டுவிடுகிறோம். ஆனால் இந்த மலச்சிக்கல் தான் பல நோய்கள் உண்டாவதற்கு அடிப்படை காரணமாக அமைகின்றது. ஒரு நாளைக்கு இரண்டு முறை உடலில் இருந்து மலம் வெளியேறினாலே போதும் நம்முடைய உடலில் நோய்கள் அண்டாது.
மலச்சிக்கல் பிரச்சினை இருக்கிறவர்கள் தினமும் இரண்டு வேளை ஆவாரம்பூ டீ போட்டு குடித்தால், இந்த பிரச்சினையே அடியோடு காணாமல் போய்விடும்.
#சருமத்_தொற்றுகளுக்கு:
நம்முடைய சருமத்திலும் பூஞ்சைத் தொற்றுக்கள் உண்டாகும். இதுபோல் உண்டாகிற சரும பூஞ்சைத் தொற்றை சரி செய்ய வேண்டுமென்றால், ஆவாரம்பூ டீ செய்து உள் மருந்தாக குடிக்கலாம்.
#சிறுநீர்த்தொற்று:
ஆவாரம்பூ டீ செய்து குடித்தால் சிறுநீர் பாதையில் உண்டாகும் தொற்று நோய்கள் குணமடையும். உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
இரத்தம் பெருகும். உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும். சிறுநீர் கடுப்பு குணமடையும்.
காய்ச்சலுக்கு:
அதிகப்படியான மருத்துவ குணங்கள் கொண்ட ஆவாரம் பூ டீ (avarampoo tea) தினமும் தொடர்ந்து பருகி வந்தால், காலரா மற்றும் டைபாய்டு போன்ற நோய்கள் குணமடையும். தீராத காய்ச்சலும் தீர்ந்து போகும்.
#நீரிழிவு_நோய்:
இப்போதேல்லாம் பலர் சிறு வயதிலேயே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, அவதிப்படுகிறார்கள். அப்படி சர்க்கரை நோயால் அவதிப்படுகிறவர்களுக்கு ஆவாரம் செடியினுடைய பட்டையானது சிறந்த தீர்வாக இருக்கும்.
ஆவாரம் பட்டையை வெந்நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து குடித்து வர, சர்க்கரை நோய் மட்டுமல்ல, மேகவெட்டு, சிறுநீரில் ரத்தம் கசிதல் ஆகிய பிரச்சினைகளையும் தீர்க்கும்.
இதற்கு காய்ச்சும்போது, பட்டையைப் போட்டு, நன்கு தண்ணீர் ஊற்றி அந்த தண்ணீர் பாதியாக சுண்டும் வரை காய்ச்ச வேண்டும்.
#வயிற்றுப்புண் குணமாக:
காய வைத்து பொடி செய்த ஆவாரம் பூ பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டிப் பருகி வந்தால், உடல்சூடு, பித்தம், நீர்க்கடுப்பு, அதிக உதிரப் போக்கு ஏற்படுதல், ஒழுங்கற்ற மாதவிலக்கு, குடல்புண், வயிற்றுப்புண் என வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனையையும் இந்த ஆவாரம்பூ டீ (avarampoo tea) குணப்படுத்திவிடும்.
Dharani Herbbals
Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti
See less
— feeling relaxed in Tamil Nadu. See less

தங்கத்திற்கு நிகரான  #ஆவாரம்_பூ_பொடி பயன்கள்:குழந்தையின்மை பிரச்சனை உள்ள பெ‌ண்க‌ள் கருப்பட்டியுடன் ஆவாரம் பூவை சேர்த்து ...
30/04/2024

தங்கத்திற்கு நிகரான #ஆவாரம்_பூ_பொடி பயன்கள்:
குழந்தையின்மை பிரச்சனை உள்ள பெ‌ண்க‌ள் கருப்பட்டியுடன் ஆவாரம் பூவை சேர்த்து உ‌ண்டு வ‌ந்தா‌ல், பெ‌ண்களு‌க்கு மல‌ட்டு‌த் த‌ன்மை ‌நீ‌ங்கு‌ம். ‌விரை‌வி‌ல் க‌ர்‌ப்ப‌ம் உண்டாகும் வாய்ப்பு ஏற்படும்.
உடல்சூடு, தோல் வறட்சி நீங்கி பலம் பெற ஆவாரை பூச்சூரணத்தை பாலில் கலந்து குடித்துவர வேண்டும். மாதவிடாயின்போது ஏற்படும் அதிக இரத்தப் போக்குக் கட்டுப்பட 20 கிராம் ஆவாரைப் பட்டையைப் பொடி செய்து அதை தண்ணீரில் போட்டு காலை, மாலை வேளைகளில் குடித்துவர வேண்டும்.
தோல் அரிப்பு ஏற்பட்டால் ஆவாரம் பூவினை அரைத்து வெந்நீர் கலந்து அதை உடம்பில் தேய்த்து ஊறவைத்து சிறிது நேரம் கழித்துக் குளித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
சிலருக்கு உடலில் கற்றாழை நாற்றம் வீசும். அவர்கள் ஆவரம் பூவை உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வீசும் கற்றாழை நாற்றம் நீங்கும்.
ஆவாரம் பூ, கொழுந்து, ஆவாரம் பட்டை, வேர் இவற்றை சம அளவு எடுத்து அரைது இந்தப் பொடியுடன் பசு நெய் கலந்து சூரணமாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உள் மூலம் குணமாகும்.
#தரணிஹெர்பல்ஸ்
#புஞ்சைபுளியம்பட்டி
#ஈரோடு மாவட்டம்.
Contact: +919965523001, +919965532001....
| | | | | See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான (மூலிகை உணவு பொருட்கள், மருந்து பொருட்கள், அழகுசாதன பொருட்கள்) அனை...
13/12/2023

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான (மூலிகை உணவு பொருட்கள், மருந்து பொருட்கள், அழகுசாதன பொருட்கள்) அனைத்து விதமான பொருட்களும் கிடைக்கும் ஒரே இடம்.

விவசாயிகளிடமிருந்து மூலிகைகளை நேரடியாக கொள்முதல் செய்து நமது பாரம்பரிய முறைப்படி ( #இயற்கை முறையில்) பொருட்களை தரத்துடன் உற்பத்தி செய்து வழங்கி வருகிறோம்.

தரணி ஹெர்பல்ஸ்-ன் தரமான பொருட்கள் தற்போது தமிழகமெங்கும் கிடைக்கிறது.

இயற்கை பொருட்களின் சங்கமம்- #தரணி_ஹெர்பல்ஸ்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான (மூலிகை உணவு பொருட்கள்...
13/12/2023

இயற்கை பொருட்களின் சங்கமம்- #தரணி_ஹெர்பல்ஸ்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான (மூலிகை உணவு பொருட்கள், மருந்து பொருட்கள், அழகுசாதன பொருட்கள்) அனைத்து விதமான பொருட்களும் கிடைக்கும் ஒரே இடம்.

விவசாயிகளிடமிருந்து மூலிகைகளை நேரடியாக கொள்முதல் செய்து நமது பாரம்பரிய முறைப்படி ( #இயற்கை முறையில்) பொருட்களை தரத்துடன் உற்பத்தி செய்து வழங்கி வருகிறோம்.

தரணி ஹெர்பல்ஸ்-ன் தரமான பொருட்கள் தற்போது தமிழகமெங்கும் கிடைக்கிறது.

பல் சம்மந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு வேடன் மூலிகை பல்பொடி:பல் சொத்தை, ஈறு வீக்கம், ஈறுகளில் ரத்தக்கசிவு, சொத்தைப்பல், ப...
08/12/2023

பல் சம்மந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு வேடன் மூலிகை பல்பொடி:

பல் சொத்தை, ஈறு வீக்கம், ஈறுகளில் ரத்தக்கசிவு, சொத்தைப்பல், பலவீனமான பல், வாய்துர்நாற்றம் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் காலையும் இரவில் தூங்கும் முன்பும் தேய்த்துவந்தால் பல நாட்களாக இருந்த பல் பிரச்சனையும் விரைவில் நீங்கும்.

குடல் பாதுகாப்பு:குடலை பாதுகாக்கும் உணவுகளில் தலை சிறந்த உணவு வில்வ பழம் ஆகும். இது நாம் உண்ணும் உணவினை நன்றாக ஜீரணிக்க ...
07/12/2023

குடல் பாதுகாப்பு:
குடலை பாதுகாக்கும் உணவுகளில் தலை சிறந்த உணவு வில்வ பழம் ஆகும். இது நாம் உண்ணும் உணவினை நன்றாக ஜீரணிக்க உதவி, குடலை ஆரோக்கியமாக பாதுகாக்க உதவுகிறது.
மலச்சிக்கலைப் போக்கும்:
சிலருக்கு எடுத்துக் கொண்ட உணவு சரியாக ஜீரணம் ஆகாமல் இருப்பதால் மலச்சிக்கல் ஏற்படும். அதற்கு, வில்வ பழத்தின் ஓட்டை நீக்கிவிட்டு சதைப்பகுதியை மட்டும் விதை இல்லாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் பால், சர்க்கரை போன்றவற்றை சேர்த்து வில்வ பழத்தை நன்றாக மிக்ஸியில் அரைத்து சர்பத் தயார் செய்து கொள்ளவேண்டும். இந்த சர்ப்பத்தினை அருந்திவர குடல் சுத்தமாகி உடம்புக்கு ஊட்டம் கொடுத்து மலச்சிக்கலையும் போக்கும். சீதபேதியையும் குணமாக்கும் சக்தி இதற்கு உண்டு.
வயிற்றுப் பிரச்சனை:
சிலருக்கு திடீரென வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் உருவாகும். அந்த சமயத்தில் வில்வ பழத்தோடு நாட்டு சக்கரைக்கு பதிலாக பனங்கற்கண்டு சேர்த்து ஜூஸாக அருந்திவந்தால் வயிற்றுப் பிரச்சனையை தீர்க்கும்.
கல்லீரலை பாதுகாக்கும்:
கல்லீரலை பாதுகாப்பதில் வில்வப் இலைக்கு முக்கிய பங்கு உண்டு. வில்வ இலையை நன்றாக அரைத்து ஒரு நெல்லிக்கனி அளவு எடுத்துக்கொண்டு அதனை சாப்பிட வேண்டும். தேவையான அளவு தண்ணீர் குடித்துக் கொள்ள வேண்டும். பிறகு பால் அல்லது மோர் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் கல்லீரல் பலம் பெற்று ஆரோக்கியமாக இருக்கும். மேலும் மஞ்சள் காமாலை நோயினை போக்கும்.

நீண்ட ஆயுளை கொடுக்கும் பாரம்பரிய அரிசி-  #கருப்பு_கவுனி...கருப்பு கவுனியின் பயன்கள்:உணவுக்குழாய் புற்றுநோயிலிருந்து பாது...
24/11/2023

நீண்ட ஆயுளை கொடுக்கும் பாரம்பரிய அரிசி- #கருப்பு_கவுனி...
கருப்பு கவுனியின் பயன்கள்:
உணவுக்குழாய் புற்றுநோயிலிருந்து பாதுகக்கிறது.
உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் நிறைந்துள்ளது.
நாட்பட்ட நோய்களாகிய சர்க்கரை, புற்றுநோய், இதயக்கோளார் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கின்றது..
தேவையற்ற கொழுப்புக்களை கட்டுப்படுத்துகிறது.
அதிகமாக நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து நிறைந்தது.
உயிர்ச்சத்து (Vitamin) பீ/ ஈ நிறைந்தது.
உயிர்ச்சத்து (Vitamin) பீ – பயன்கள்: தோல் பாதுகாப்புக்கு நல்லது, தசைப்பிடிப்புக்கு நல்லது, நரம்புகளுக்கு சிறந்தது.

Address

TMS COMPLEX, ARAGALUR PERIVU Road, THALAIVASAL, MUMDI
Salem
636112

Telephone

+919025361636

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vetri Vinayaga Pooja Store Nattu Marunthu Kadai,Thalaivasal. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share