Kattankudy News

Kattankudy News இலங்கை மற்றும் காத்தான்குடியின் முக?
(1)

இந்தோனேசியாவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இன்று (14) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ...
14/01/2022

இந்தோனேசியாவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இன்று (14) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் ஜகார்த்தாவிலிருந்து 110 கி.மீ. தொலைவில், 70 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டுள்ளது.

இருப்பினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. மேலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

Join Our WhatsApp Group 👇🏼🪀

எமது WhatsApp குழுவில் இன்றே இணைய 👇🏼🪀

https://chat.whatsapp.com/EyxCx7zZdO82OChYvbc9Wc

https://chat.whatsapp.com/IT4qQUTybou07IDxzHStHP

08/12/2021
20/09/2021
07/08/2021

*5,000 பேர் கொரோனாவுக்கு பலி*

நேற்றைய தினம் (06) நாட்டில் மேலும் 98 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,017 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 327,019 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 290,794 ஆக அதிகரித்துள்ளது.

01/08/2021

*6 வருடங்களின் பின்னர்ரஷ்யாவிற்கு நேரடி விமான சேவைகள் ஆரம்பம்*

6 வருடங்களின் பின்னர் ஶ்ரீலங்கன் விமான சேவையினால் இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் நேரடி விமான சேவைகள் இன்று (01) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் ரஷ்யாவின் மெஸ்கோவில் இருந்து பயணத்தை ஆரம்பித்த UL 534 என்ற விமானம் இன்று காலை 6.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் வௌிநாட்டு சுற்றுலா பயணிகள் 51 பேர் குறித்த விமானத்தில் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் தொடர்ந்து விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

12/07/2021

💥 *SCHOOLS REOPEN*
*ஒகஸ்ட் மாதத்தில் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை – கல்வி அமைச்சர்*

ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தியு பின்னர் பாடசாலைகளைத் திறப்பதற்கு ஓகஸ்ட் மாதத்தில் ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

இன்று (திங்கட்கிழமை) பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

கொழும்பு பிராந்தியத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் இன்றும் நாளையும் தடுப்பூசி போடப்படும் என்றும் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

நாட்டில் 242,000 ஆசிரியர்கள் உள்ளனர் என்றும் அவர்களில் பெரும்பாலோருக்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் முன்னெடுத்த போராட்டத்தில் இடம்பெற்ற கைது நடவடிக்கை காரணமாக ஒன்லைன் கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகியுள்ளனர் என்றும் ஊடகவியலாளர் கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், சில ஆசிரியர்கள் மட்டுமே இன்று கற்பிப்பிலிருந்து விலக நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றும் இருப்பினும், ஒன்லைன் கல்வியைத் தொடர வேண்டும் என்றாலும் அது நிரந்தர தீர்வு அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

10/07/2021

*இலங்கை முஸ்லிம்கள் ஹஜ்ஜுப் பெருநாளை 21 ஜூலை, புதன் கிழமை கொண்டாடுவார்கள் என அறிவிப்பு*

துல் ஹஜ் மாதத்திற்கான தலை பிறை இன்று 10.07.2021, தென்படாததனால் இலங்கை முஸ்லிம்கள் ஹஜ்ஜுப் பெருநாளை 21 ஜூலை 2021, புதன் கிழமை கொண்டாடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது

05/07/2021

*ஃபைஸர் தடுப்பூசியின் முதற் தொகுதி நாட்டை வந்தடைந்தன*

இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட ஃபைசர் கொவிட் தடுப்பூசியின் முதல் தொகுதி இன்று (05) அதிகாலை இலங்கை வந்தடைந்துள்ளன.

இலங்கை கொள்வனவு செய்துள்ள 2 இலட்சம் தடுப்புசி டோஸ்களின் முதல் தொகுதியாக 26,000 ஃபைஸர் தடுப்பூசி டோஸ்கள் இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இந்த ஃபைசர் தடுப்பூசியை தெற்காசிய பிராந்தியத்தில் ஒரு நாடு பெறுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த பைசர் தடுப்பூசியை விரைவில் மக்களுக்கு விநியோகிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, நேற்றைய தினம் மேலும் ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

02/07/2021

*🚨BREAKING NEWS🚨*
*தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளை இம்மாதம் ஆரம்பிக்க தீர்மானம்*

100 க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளை சுகாதாரத் பிரிவின் முழு பரிந்துரைகளுக்கு இணங்க ஜூலை மாதத்தில் ஆரம்பிப்பதற்கான திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

இதற்காக முதலில் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவது கட்டாயமாகும் என ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது வலியுறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நாட்டினுள் 50 க்கும் குறைவான மாணவர்களை கொண்ட 1,439 பாடசாலைகளும், 51-100 மாணவர்களை கொண்ட 1,523 பாடசாலைகளும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலில் குறித்த பாடசாலைகளை ஆரம்பித்து பின்னர் ஏனைய பாடசாலைகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

*கொரோனா தொற்றுக்கு இன்றும் 1,180 பேர் அடையாளம்*  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,180 பேர் இன்று அடையாளம் காணப்பட்...
30/06/2021

*கொரோனா தொற்றுக்கு இன்றும் 1,180 பேர் அடையாளம்*

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,180 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 258,405 ஆக அதிகரித்துள்ளது.

https://chat.whatsapp.com/EyxCx7zZdO82OChYvbc9Wc

https://chat.whatsapp.com/IT4qQUTybou07IDxzHStHP

WhatsApp Group Invite

30/06/2021

*முல்லைத்தீவில் தொடர்ச்சியாக மீட்கப்படும் வெடிபொருட்கள்*

முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மை நாட்களாக நாளாந்தம் வெடிபொருட்கள் மீட்கப்படுவதும் வெடிப்பு சம்பவங்களும் பதிவாகி வருகிறது.

அந்த வகையில் நேற்றைய முன்தினம் (28) முல்லைத்தீவு, சிலாவத்தை பகுதியில் லதனி சிறுவர் இல்லத்துக்கு அருகில் சில வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதோடு, முல்லைத்தீவு நகர் பகுதியில் சுனாமி நினைவாலயதிற்கு அருகிலும் வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்று (29) முல்லைத்தீவு சாலைப்பகுதியில் கடற்படையினரால் வெடிபொருடக்ள் சில மீட்கப்பட்டுள்ளன.

இரண்டு குண்டுகள், ஒரு கிழைமோர் குண்டு உள்ளிட்ட வெடிபொருட்கள் இதன்போது மீட்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

போரின் போது பாவிக்கப்பட்ட குறித்த வெடிபொருட்கள் நிலத்தில் மறைத்துவைக்கப்பட்ட நிலையில் கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக மீட்கப்பட்டுள்ளன.

குறித்து வெடிபொருட்கள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து மீட்கப்பட்ட வெடிபொருட்களை தகர்த்து அழிப்பதற்காக சிறப்பு அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

-முல்லைத்தீவு நிருபர் தவசீலன்-

30/06/2021

*20 தொலைகாட்சி அலைவரிசைகளின் ஊடாக கற்றல் நடவக்கை*

சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அமைய, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது தொடர்பில் பல்வேறு மூலோபாயங்கள் பரீட்சிக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு 20 தொலைகாட்சி அலைவரிசைகளின் ஊடாக மாணவர்களுக்கு வீடுகளிலிருந்தே கல்வி கற்பதற்கான வசதிகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சுனாமி கடல்பேரலை மற்றும் தற்போதைய கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தலுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் இந்த தொலைகாட்சி அலைவரிசை ஊடான மாணவர்களின் கற்றல் நடவடிக்கை பாடசாலைகளைப் போன்று காலை 7.30 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 மணி வரை முன்னெடுக்கப்படும் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா என்றும் சுட்டிக்காட்டினார்.

தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைக்கு முன்னுரிமை அளித்து, பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு எதிர்கால நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மேலும் தெரிவித்தார்.

30/06/2021

*2,697,778 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டது*

நாட்டில் இதுவரை 2,697,778 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, நேற்றைய தினத்தில் (29) மாத்திரம் 61,255 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

மேலும், சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 43,999 பேருக்கு போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை 375,784 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

அத்துடன் இதுவரை 114,795 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2,865 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதுடன் 2,435 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

*L.M.S முறை மூலம் பாடசாலை மாணவர்களுக்கு ஒன்லைன் கல்வித் திட்டம்* ஈ - தக்சலாவ வேலைத்திட்டத்தின் கீழ் எல்.எம்.எஸ் (L.M.S) ...
25/06/2021

*L.M.S முறை மூலம் பாடசாலை மாணவர்களுக்கு ஒன்லைன் கல்வித் திட்டம்*

ஈ - தக்சலாவ வேலைத்திட்டத்தின் கீழ் எல்.எம்.எஸ் (L.M.S) முறை மூலம் பாடசாலை மாணவர்களுக்கு நிகழ்நிலைக் கல்வியை வழங்குவதற்கான திட்டம் இன்று ஆரம்பமாகின்றது.

உத்தேச இத்திட்டத்தின் முதற்கட்டமாக 20 பாடசாலைகளில் ஆரம்பமாகி, எதிர்காலத்தில் 200 பாடசாலைகளுக்கு விரிவுபடுத்தப்படும்.

ஒன்லைன் முறையின் கீழ் கிராமப்புற பாடசாலைகளின் மாணவர்களுக்கு உயர்தரமான கல்வியை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

அத்துடன், வீடியோ (காணொளி) தொழில்நுட்பத்தின் கீழ் ஒன்லைன் கல்வியை இலவசமாக வழங்கும் திட்டமும் ஈ - தக்சலாவ வேலைத்திட்டத்தின் கீழ் இந்த மாதத்தில் இருந்து ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Group Invite

*7 இலட்சம் மாணவர்கள் ஒன்லைன் வசதியின்றி தவிப்பு, போதிய Coverage இன்றி பெருமளவு பாதிப்பு - கல்வி அமைச்சு*நாட்டில் 7 இலட்ச...
25/06/2021

*7 இலட்சம் மாணவர்கள் ஒன்லைன் வசதியின்றி தவிப்பு, போதிய Coverage இன்றி பெருமளவு பாதிப்பு - கல்வி அமைச்சு*

நாட்டில் 7 இலட்சத்திற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் ஒன்லைன் கல்வி நடவடிக்கைகளுக்கான அடிப்படை வசதிகள் இன்றி இருப்பதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மூவாயிரத்திற்கும் அதிகமான பாடசாலைகளில் ஒன்லைன் கல்வி வசதிகள் இல்லை எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா கூறியுள்ளார்.

இவ்வாறான அசௌகரியங்களுக்கு மத்தியில் மாணவர்களின் எதிர்கால கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து பேராசிரியர் கபில பெரேரா நியூஸ்ஃபெஸ்ட்டுக்கு தௌிவுபடுத்தினார்.

நாடு முழுவதுமுள்ள 4.3 மில்லியன் பாடசாலை மாணவர்களில் சுமார் 7 இலட்சம் மாணவர்கள் ஒன்லைன் கல்வி நடவடிக்கைக்கான வசதியின்றி உள்ளதாகவும் அவர் கூறினார்.

கையடக்க தொலைபேசிகளுக்கு போதிய Coverage இன்மையால் பெருமளவான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனால் அவ்வாறான மாணவர்கள் வசிக்கும் பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு Coverage வசதி உள்ளதா என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக அவர் கூறினார்.

அவ்வாறு காணப்படுமாயின், சுகாதார வழிகாட்டல்களுடன் குறித்த பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைத்து கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதால், பாடசாலை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா குறிப்பிட்டார்

https://chat.whatsapp.com/EyxCx7zZdO82OChYvbc9Wc

https://chat.whatsapp.com/IT4qQUTybou07IDxzHStHP

*இலங்கைக்கு அருகில் கடற்பரப்பில் மற்றுமொரு கப்பலில் தீப்பரவல்!*இலங்கைக்கு அருகில் கடற்பரப்பில் மற்றுமொரு கப்பலில் தீப்பர...
25/06/2021

*இலங்கைக்கு அருகில் கடற்பரப்பில் மற்றுமொரு கப்பலில் தீப்பரவல்!*

இலங்கைக்கு அருகில் கடற்பரப்பில் மற்றுமொரு கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிரிந்தை – மஹா இராவணன் கலங்கரைவிளக்கத்தில் இருந்து கிழக்கு திசையில் 480 கடல்மைல்களுக்கு அப்பால் கப்பல் ஒன்றின் இயந்திர அறையில் தீப்பற்றியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இலங்கை கடற்படையினர் இந்த விடயத்தினைத் உறுதிப்படுத்தியுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பில் இருந்து சிங்கபூர் நோக்கி பயணித்த கப்பல் ஒன்றிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுன்கிறது.

https://chat.whatsapp.com/EyxCx7zZdO82OChYvbc9Wc

https://chat.whatsapp.com/IT4qQUTybou07IDxzHStHP

WhatsApp Group Invite

*100,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி!* உள்ளூர் சந்தையில் அரிசியின் அசாதாரண விலை உயர்வை எதிர்க...
21/06/2021

*100,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி!*

உள்ளூர் சந்தையில் அரிசியின் அசாதாரண விலை உயர்வை எதிர்கொள்வதற்காக 100,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவில் முன்மொழியப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

https://chat.whatsapp.com/EyxCx7zZdO82OChYvbc9Wc

https://chat.whatsapp.com/IT4qQUTybou07IDxzHStHP

WhatsApp Group Invite

*தடுப்பூசி டோஸ்களை மீதப்படுத்தி தில்லுமுல்லு செய்த வைத்தியர்!*துறைமுக ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட்ட 300 டோஸ் தடுப்பூசிகளை த...
21/06/2021

*தடுப்பூசி டோஸ்களை மீதப்படுத்தி தில்லுமுல்லு செய்த வைத்தியர்!*

துறைமுக ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட்ட 300 டோஸ் தடுப்பூசிகளை துறைமுக அதிகார சபையின் பிரதான வைத்திய அதிகாரி தனது உறவினர்கள் மற்றும் நெருங்கமானவர்களுக்கு வழங்கியுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சுயாதீன துறைமுக ஊழியர் சங்கம் இன்று வௌிப்படுத்தியது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சுயாதீன துறைமுக ஊழியர் சங்கத்தின் தலைவர் லால் பங்கமுவ, குறித்த வைத்தியரால் ஒரு டியூபில் இருந்து 12 முதல் 13 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இவ்வாறு மீதப்படுத்திக் கொண்ட சுமார் 300 டோஸ் தடுப்பூசிகளை அவரின் உறவினர்களுக்கு மற்றும் நெருங்கமானவர்களுக்கு வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குறித்த வைத்தியர் தற்போது கட்டாய விடுமுறையில் உள்ளதாக லால் பங்கமுவ தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத், இது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு தகவல்களை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

https://www.daraz.lk/products/bluetooth-stereo-earphone-magnetic-headphones-xt-11-wireless-athlete-sports-headset-bass-music-earpieces-with-mic-silver-i121434633-s1037678150.html?dsource=share&laz_share_info=2811976_3_100_1000008666211_2682055_null&laz_token=b964e07eb646b5293e02324ffa121d6d

Buy Bluetooth stereo Earphone Magnetic Headphones XT 11 Wireless Athlete Sports Headset Bass Music Earpieces with Mic Silver online at Daraz srilanka with ✓ Ease & Speed ✓ 100% Genuine Product ✓ Fastest Delivery all over srilanka.

Bluetooth stereo Earphone Magnetic Headphones XT 11 Wireless Athlete Sports Headset Bass Music Earpieces with Mic Silver...
21/06/2021

Bluetooth stereo Earphone Magnetic Headphones XT 11 Wireless Athlete Sports Headset Bass Music Earpieces with Mic Silver https://www.daraz.lk/products/bluetooth-stereo-earphone-magnetic-headphones-xt-11-wireless-athlete-sports-headset-bass-music-earpieces-with-mic-silver-i121434633-s1037678150.html?dsource=share&laz_share_info=2811976_3_100_1000008666211_2682055_null&laz_token=b964e07eb646b5293e02324ffa121d6d

Buy Bluetooth stereo Earphone Magnetic Headphones XT 11 Wireless Athlete Sports Headset Bass Music Earpieces with Mic Silver online at Daraz srilanka with ✓ Ease & Speed ✓ 100% Genuine Product ✓ Fastest Delivery all over srilanka.

03/05/2021

*2020 A/L results release date*

2020 A/L results release process is at its final stage. Calculated Zscores marks double checking process going on. *Results to release anytime before May 5th.*
The results will release to examination department official www.doenets.lk website.

*உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை மறுநாள் புதன்...!*

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் மே 5 ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

முன்னதாக இப் பரீட்சை முடிவுகளை ஏப்ரல் 30 க்கு முன்னர் வெளியிட திட்டமிடப்பட்டது.

2020 உயர்தரப் பரீட்சை முடிவுகள் இறுதி கட்டத்தில் உள்ளன. முடிவுகளை வெளியிடுவதற்கு முன்பு, கணக்கிடப்பட்ட Zscores மதிப்பெண்கள் இருமுறை சரிபார்க்கப்பட வேண்டும் என்று பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் கூறியுள்ளன.

அந்த நடவடிக்கை தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. செயல்முறை முடிந்ததும் முடிவுகளை மே 5 அல்லது அதற்கு முன்னர் வெளியிட முடியும் என்றும் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

முடிவுகளின் அடிப்படையில், 2021 செப்டெம்ர் மாதத்துக்குள் மாணவர்களை பல்கலைக்கழகங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

முடிவுகள் வெளியானதும் மாணவர்கள் கல்வியமைச்சின் உத்தியோகபூர்வ வலைத்தளமான www.doenets.lk என்பவற்றில் பார்வையிடலாம்.

_Join this group to get Breaking News, Current Political News, World News and daily update on COVID19._

⭕எமது *WhatsApp Group* ஊடாக இனைந்து கொள்ள👇🏼_

https://chat.whatsapp.com/IT4qQUTybou07IDxzHStHP

https://chat.whatsapp.com/EyxCx7zZdO82OChYvbc9Wc

02/05/2021

🚨😨🚨😱🚨😨

*நாளொன்றுக்கான அதிகபட்ச கொவிட் நோயாளர்கள் இன்று பதிவாகியுள்ளனர்!*

இலங்கையில் மேலும் 615 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய *❗❗❗இன்றைய தினத்தில் மாத்திரம் 1,843 பேருக்கு* கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 111,705 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 97,242 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளாகி 687 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://chat.whatsapp.com/IT4qQUTybou07IDxzHStHP

https://chat.whatsapp.com/EyxCx7zZdO82OChYvbc9Wc

27/04/2021
27/04/2021

*உடனடியாக புர்காவுக்கு தடையில்லை, சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதும் அமுலாகும்*

பொது இடங்களில் முழுமையாக முகத்தை மூடும் வகையிலான அனைத்து முகம் மூடிகளுக்கும் தடை விதிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பில் இன்று (27) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் குறித்த அனுமதி வழங்கப்பட்டதாக, அமைச்சரவை இணை பேச்சாளரும், வெகுசன ஊடக அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

குறித்த தடையை அமுல்படுத்துவது தொடர்பில் சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாக, அமைச்சரவை இணை பேச்சாளரும், வெகுசன ஊடக அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இன்று (27) பிற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் காணப்படும் பிரச்சினைகளை கருத்திற் கொண்டு பல்வேறு நாடுகளிலும் இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் சரத் வீரசேகரவின் குறித்த யோசனையில் முன்வைக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

குறித்த சட்டமூலம் தயாரானதும், அது பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னர் அமுல்படுத்தப்படும் எனவும், அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

https://chat.whatsapp.com/EyxCx7zZdO82OChYvbc9Wc

https://chat.whatsapp.com/IT4qQUTybou07IDxzHStHP

19/04/2021

*🔥🔥Breaking News🔥🔥*
*அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீண்டும் திறக்க முடிவு*

நாட்டின் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீண்டும் திறக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதன்படி ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி முதல் அனைத்து ஆண்டுகளுக்குமான பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்

https://chat.whatsapp.com/IT4qQUTybou07IDxzHStHP

https://chat.whatsapp.com/EyxCx7zZdO82OChYvbc9Wc

15/04/2021

*இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சி - அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 204.62 ரூபா*

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று வீதத்திற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 204.62 ரூபாவாக பதிவாகியுள்ளது.

https://chat.whatsapp.com/EyxCx7zZdO82OChYvbc9Wc

https://chat.whatsapp.com/IT4qQUTybou07IDxzHStHP

12/04/2021

*சீனாவிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்!*

சீன அபிவிருத்தி வங்கியுடன் இன்று (12) 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தமொன்று கைச்சாத்தானதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள சீன தூதரகத்தில் குறித்த ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கடன் தொகை இந்த வாரத்தினுள் இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

https://chat.whatsapp.com/EyxCx7zZdO82OChYvbc9Wc

https://chat.whatsapp.com/IT4qQUTybou07IDxzHStHP

12/04/2021

*புற்றுநோய் தேங்காய் எண்ணெய் மீள் ஏற்றுமதி ஆரம்பம்*

மலேசியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட புற்றுநோய் பதார்த்தமான ´அஃப்லாடொக்சின்´ அடங்கிய தேங்காய் எண்ணெய் மீள் ஏற்றுமதிக்காக கொழும்பு துறைமுகத்தில் உள்ள SAGT முனையத்தில் நங்கூரமிடப்பட்ட பாபரா கப்பலில் ஏற்றதல் ஆரம்பமாகியுள்ளது.

இன்று (12) காலை 9.30 மணியளவில் இந்த செயல்முறை தொடங்கியதாக சுங்க ஊடக பேச்சாளர் சுங்க பிரதி பணிப்பாளர் சுதத்த சில்வா தெரிவித்தார்.

கடான ரிபயினரீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான தேங்காய் எண்ணெய் அடங்கிய 6 கொள்கலன்களே இவ்வாறு மீள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

குறித்த தேங்காய் எண்ணெய் தொகை கடந்த ஏப்ரல் 6 ஆம் திகதி இறக்குமதியாளரின் தனியார் கிடங்கிலிருந்து சுங்க அதிகாரிகளின் மேற்பார்வையில் கீழ் கொழும்பு துறைமுகத்தில் உள்ள SAGT முனையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

சுங்க பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலின் பேரில், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்ரிய , சுங்கத் தடுப்புப் பிரிவு மற்றும் மத்திய சுங்க ஆய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு கொழும்பு துறைமுகத்தில் உள்ள SAGT முனையத்திற்கு வருகை தந்துள்ளனர்.

தேங்காய் எண்ணெயைக் கொண்டு செல்லும் பாபரா கப்பல் இன்று மாலை 5.00 மணிக்கு கொழும்பு துறைமுக SAGT முனையத்திலிருந்து மலேசியாவுக்கு புறப்பட உள்ளது.

https://chat.whatsapp.com/EyxCx7zZdO82OChYvbc9Wc

https://chat.whatsapp.com/IT4qQUTybou07IDxzHStHP

07/04/2021

*வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவரின் சடலம் மீட்பு*

கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி வீதியின் வீடு ஒன்றுக்கு அருகில் இருந்து வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்கிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

06/04/2021

*பல்கலைகழக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம்*

கொரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள பல்கலைகழக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடுமையான சுகாதார நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு புத்தாண்டு முடிவுற்ற பின்னர் இந்த நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும்மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கிய பின்னர் கல்வி நடவடிக்கைகளை இம்மாதத்தில் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாகவம் அவர் தெரிவித்துள்ளார்

https://chat.whatsapp.com/EyxCx7zZdO82OChYvbc9Wc

https://chat.whatsapp.com/IT4qQUTybou07IDxzHStHP

31/03/2021

*மோட்டார் சைக்கிள்களை பரிசோதனை செய்யும் விசேட நடவடிக்கை இன்று ஆரம்பம்*

மோட்டார் சைக்கிள்களை செலுத்துவோர்களினால் இடம்பெறும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் இன்று தொடக்கம் 4 நாட்களுக்கு விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ள பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

வீதி விபத்துக்களினால் ஏற்படும் மரணங்களில் பெரும்பாலானவை மோட்டர் சைக்கிளாளேயே இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவிக்கையில், நேற்றைய தினம் 8 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இச்சம்பவங்கில் நடை பாதையில் சென்ற இருவரும், மோட்டர் வாகனங்களை செலுத்திய மூவரும், வாகனங்களில் சென்ற மூவரும் உயிரிழந்துள்ளனர்.

வீதி விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வது இந்த மோட்டர் சைக்கிள் பரிசோதனையாகும். மோட்டார் சைக்கிள்களில் சொல்வோரை சிரமத்துக்குள்ளாக்குவது இதன் நோக்கமல்ல. வீதி பாதுகாப்பே முக்கியமாகும். நாளாந்தம் விபத்துக்களினால் 3 தொடக்கம் 5 பேர் உயிரிழக்கின்றனர். இந்த உயிரிழப்புக்களை தடுப்பதே எமது நோக்கமாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

21/03/2021
05/03/2021

075 33 43 665

25/02/2021

*🎉BREKING NEWS*
_-Kattankudy News_

*ஜனாஸா அடக்கத்திற்கு அனுமதி - வர்த்தமானி அறிவிப்பு நள்ளிரவில் வெளியாகும். - சுகாதார அமைச்சர் அறிவிப்பு*

முஸ்லிம்களின் கொரோனா ஜனாஸா அடக்கத்திற்கு அனுமதி வழங்கும் வர்த்தமானி அறிவிப்பு இன்று நள்ளிரவு வெளியிடப்படும் - சுகாதா அமைச்சர் அறிவிப்பு

https://chat.whatsapp.com/IT4qQUTybou07IDxzHStHP

23/02/2021

*அதிகாலையில் 21 வயது இளம்பெண்ணை வீடு புகுந்து கடத்திய குழு.*

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றிறகு வெள்ளை வான் ஒன்றில் சென்ற 4 பேர் கொண்ட குழுவினர் இன்று (23) அதிகாலை வீட்டை உடைத்து தாக்குதலை நடாத்திவிட்டு நித்திரையில் இருந்த 21 வயதுடைய யுவதி ஒருவரை கடத்திச் சென்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

*காதான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி ஜுனியர் வீதியில் உள்ள வீடு* ஒன்றில் இரு பெண் பிள்ளைகள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் குறித்த வீட்டை சம்பவ தினமான இன்று அதிகாலை ஒரு மணிக்கும் 1.30 மணிக்கும் இடையில் வெள்ளைவான் ஒன்றில் வந்த குழுவினர் வீட்டின் வெளிக்கதவின் பூட்டினை உடைத்து வீட்டின் வாசல்கதவை உடைத்து உள்நுழைந்த போது வீட்டின் உரிமையாளர் அவர்களை பொல்லால் தாக்கிய போதும் அவர்கள் அவரை திருப்பி தாக்கிவிட்டு நித்திரையில் இருந்த 21 வயது யுவதியை கடத்திச் சென்றுள்ளார் .

சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

_Join this group to get Breaking News, Current Political News, World News and daily update on COVID19._

⭕எமது *WhatsApp Group* ஊடாக இனைந்து கொள்ள👇🏼_

https://chat.whatsapp.com/EyxCx7zZdO82OChYvbc9Wc

https://chat.whatsapp.com/IT4qQUTybou07IDxzHStHP

15/02/2021

*நாட்டில் நேற்றைய தினம் 801 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம். 7 பேர் தொற்றால் பலி.*

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 07 பேர் நேற்று உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 397 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நேற்று நாட்டில் 801 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 75 ஆயிரத்து 653 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 865 பேர் குணமடைந்த நிலையில் நேற்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, கொரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 68 ஆயிரத்து 696 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த நிலையில் நாட்டின் 67 சிகிச்சை நிலையங்களில் 6 ஆயிரத்து 567 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் 598 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

_Join this group to get Breaking News, Current Political News, World News and daily update on COVID19._

⭕எமது *WhatsApp Group* ஊடாக இனைந்து கொள்ள👇🏼_

https://chat.whatsapp.com/EyxCx7zZdO82OChYvbc9Wc

https://chat.whatsapp.com/IT4qQUTybou07IDxzHStHP

Address

Razeedlane
Kattankudi
30100

Alerts

Be the first to know and let us send you an email when Kattankudy News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kattankudy News:

Share

Category