20/11/2023
சத்துக்கள் நிறைந்த #முருங்கை_கீரை_சூப் பயன்கள்:
முருங்கை கீரை நன்மைகள்
முருங்கை கீரை பல்வேறு விதமான சத்துக்களைக் கொண்டது. அதில் விட்டமின் பி, பி2, சி, இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், கால்சியம், ஜீங்க், மெக்னீசியம், பாஸ்பரஸ் முதலான முக்கிய சத்துக்களைக் குறிப்பிடலாம். இவ்வளவு சத்துக்களையும் அவ்வளவு எளிதில் மாத்திரைகளால் சந்துவிட முடியாது. அதிலும் பைசா செலவில்லாமல் இயற்கையில் கிடைக்கும் சத்துக்களை வீணாக்குவதேன்? கீழே முருங்கை கீரையின் நன்மைகளை விரிவாகப் பார்க்கலாம்.
உடல் சூட்டைத் தணிக்கும்
முருங்கை கீரை குளிர்ச்சி தன்மை கொண்டது. இதை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் சூடு தணியும். இதனால் உடலில் வியர்குருகள் வராமல் தடுக்கப்படும். முருங்கை இலையில் சாறு எடுத்தும் அருந்தி வர நல்ல பலன் கிடைக்கும்.
வலி குறையும்
முருங்கை கீரையை சாப்பிடுதால் கை, கால் வலிகள் குறையும். மூட்டுவலியும் வராமல் தடுக்கப்படும். முருங்கை கீரையில் நிறைந்து உள்ள கால்சியம் சத்து எலும்புகளைப் பலப்படுத்தும்.
புண்கள் ஆறும்
முருங்கை கீரைகளைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வதால் நிறைய நன்மைகள் உள்ளன. அதில் மிகவும் குறிப்பானது புண்களை ஆற்றும் தன்மை.வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண்கள் அனைத்தும் இதை சாப்பிடுவதால் குணமடையும்.
கண் பார்வை பலம்
முருங்கை கீரை கண்பார்வைக்கு மிகவும் உகந்தது. இதனால் கண்கள் குளிர்ச்சி அடையும்.இதில் விட்டமின் சி நிறைந்துள்ளது. இதனால் கண்பார்வை சிறப்பான முறையில் வளம் அடையும். குழந்தைகளுக்கு அடிக்கடி முருங்கை கீரையைச் செய்து தருவதால் கண் சம்பந்தமான குறைபாடுகள் வராமல் பாதுகாக்கலாம்.
சருமம் வளம் அடையும்
சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் முருங்கை கீரையை உட்கொள்வதால் குணமடையும். சருமத்தில் ஏற்பட்டுள்ள கொப்புளங்கள் ,பருக்கள் அனைத்தும் முருங்கை கீரையை சாப்பிடுவதால் சரியாகும்.
சிறுநீரகம் வலுவடையும்
முருங்கை கீரையை உணவில் எடுத்துக்கொள்வதால் சிறுநீரகம் சிறப்பாக வெளியேறும். இதில் நிறைந்துள்ள சத்துக்கள் சிறுநீரகத்தை வலுவடையச் செய்யும்.
மனவளம் அடையும்
முருங்கை கீரையில் உள்ள விட்டமின் சி மன நலத்திற்கு உகந்தது. இந்தக் கீரையை எடுத்துக் கொள்பவர்களுக்கு மன அழுத்தம் குறைவாகவே காணப்படுகின்றது. கூடுதலாக நினைவுத்திறன் அதிகரிக்கும். குழந்தைகளுக்குச் சத்தான இந்தக் கீரையைத் தரலாம்.
இரத்தம் விருத்தியடையும்
இந்தக் கீரை ரத்தசோகையைக் குணப்படுத்துவதற்குப் பெயர் போனது. வாரம் 2 முறை இந்த கீரையை எடுத்துக் கொள்வதால் இரத்தம் சிறப்பான வகையில் விருத்தியடையும். இதற்குக் காரணம் இந்த கீரையில் நிறைந்துள்ள இரும்புச் சத்து தான். அதனால் இந்தக் கீரையை உணவில் எடுப்பவருக்கு ரத்தசோகை வருவதற்கு வாய்ப்பே கிடையாது. கர்ப்பிணிப் பெண்களுக்குக் கர்ப்ப காலத்தில் ரத்த சோகை ஏற்படாமல் இருக்க இந்த கீரை உதவும்.
இயற்கை வயாகரா
முருங்கை கீரை, பூவை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் நாவின் சுவையின்மை பிரச்சனை தீரும். முருங்கை பூவை அரைத்து பால் மற்றும் பனங்கற்கண்டுடன் சேர்த்து அருந்தலாம். இதை 48 நாட்கள் தொடர்ந்து செய்து வர, தாம்பத்திய உறவில் நாட்டம் அதிகரிக்கும். முருங்கை கீரையை அல்லது பூவை பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வர ஆண்மை அதிகரிக்கும். இதனால் கணவன் மனைவிக்குள் காதல் அதிகரிக்கும்.
குழந்தை பேற்றைச் சாத்தியப்படுத்தும்
பெண்களின் கர்ப்பப்பை வலுவடைய இந்தக் கீரை உதவுகிறது. இதனால் பெண்களுக்குக் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகமாக ஏற்படுகிறது. அதுபோல ஆண்களுக்கு விந்து அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவுகிறது. ஆக இருபாலருக்குமே குழந்தை பாக்கியம் ஏற்பட இந்த கீரை உதவுகிறது.
கூந்தல் செழிப்பாக வளரும்
இந்தக் கீரை கூந்தல் வளர்ச்சிக்கு ஏற்றது. இந்தக் கீரையைப் பொரியல் செய்து அடிக்கடி சாப்பிட்டால் கூந்தல் உதிராமல் இருக்கும். மேலும் கூந்தல் கருமையாகச் செழித்து வளரும். இதிலுள்ள சத்துக்கள் முடி உதிர்வை பெருமளவில் கட்டுப்படுத்தும்.
இளமைத் தோற்றம் நீடிக்கும்
இந்தக் கீரைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை வயதான தோற்றம் சீக்கிரம் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.
சுவாசக் கோளாறு, சளித்தொல்லை நீங்கும்
இந்தக் கீரை சுவாசம் சம்பந்தமான அத்தனைப் பிரச்சனைகளையும் குணப்படுத்த உதவுகிறது. சளித்தொல்லை, சுவாசக் கோளாறு, ஆஸ்துமா மற்றும் சைனஸ் போன்ற அனைத்து வியாதிகளையும் இந்தக் கீரை குணப்படுத்தத் துணை புரிகிறது.
மலச்சிக்கல் தீரும்
இந்தக் கீரையில் சிறப்பான அளவு நார்ச்சத்து உள்ளது. அதனால் இந்தக் கீரை மலச்சிக்கல் பிரச்சனைக்குத் தீர்வாக உள்ளது. இதைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் இந்த பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்ளலாம்.
தாய்ப்பால் சுரக்கும்
குழந்தைப் பேறு பெற்ற பெண்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பது உகந்தது. இருப்பினும் சில பெண்களுக்குத் தாய்ப்பால் சுரப்பு குறைவாகக் காணப்படும். அவ்வாறான பெண்கள் தங்கள் உணவில் இந்தக் கீரையை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனால் தாய்ப்பால் சுரப்பு சிறப்பான வழியில் அதிகரிக்கும்.
உடல் எடை குறையும்
இதை அடிக்கடி செய்து சாப்பிடுவதால் உடல் எடை மேண்மை அடையும். தேவையில்லா கொழுப்பு குறைந்து, உடல் எடை குறையும். தசைகள் வலுப்பெற்று பொலிவான தோற்றம் பெறுவீர்கள். அதிக எடையுடையவர்கள் இதை தினசரி உணவில் சேர்க்கலாம்.
இதய செயல்பாடு சிறக்கும்
இந்தக் கீரை இதயத்தை வலுப்படுத்த உதவும். இதனால் இதயம் சிறப்பான வகையில் செயல்படும். எனவே இருதய சம்பந்தமான எந்த வியாதியும் நெருங்கவே கூடாது எனில், வாரம் இருமுறையாவது இந்தக் கீரையை உணவில் சேருங்கள்.
வாயுத் தொல்லை நீங்கும்
இந்தக் கீரை குடல் வாயு தொல்லையைச் சரிப்படுத்தும். வாயுக் கோளாறு உள்ளவர்கள் இந்த கீரையைச் சாப்பிடலாம். இந்த கீரையில் உள்ள மருத்துவ குணங்கள் அவர்களுக்குப் பெரிதும் உதவும்.
நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்
இந்தக் கீரையில் விட்டமின் சி போதிய அளவில் உள்ளது. இந்த சத்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும். இதனால் பல்வேறு தொற்று நோய்கள் உடலைத் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
பற்கள் வலுவடையும்
முருங்கை இலைகளில் கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் அதிகமாக உள்ளன. இவை பற்கள் வலுப் பெற உதவும். அதனால் பற்கள் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.
Place your order here: http://dharaniherbbals.in/
#தரணி_ஹெர்பல்ஸ்,
#புஞ்சைபுளியம்பட்டி.
+919965523001, +919965532001
Dharani Herbbals Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti