Ramnaath Raja

  • Home
  • Ramnaath Raja

Ramnaath Raja Great India

குழந்தையானந்த சுவாமிகள்   மதுரை காளவாசலில் அதிஸ்டானம்  ஒருமுறை அல்ல நான்குமுறை சமாதியிலிருந்து உயிருடன் வெளிப்பட்டு தமிழ...
18/02/2023

குழந்தையானந்த சுவாமிகள் மதுரை காளவாசலில் அதிஸ்டானம்
ஒருமுறை அல்ல நான்குமுறை சமாதியிலிருந்து உயிருடன் வெளிப்பட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடமாடியவர் குழந்தையானந்த சுவாமிகள். தமது முந்தைய சமாதிகளைப் பற்றி சம்பந்தப்பட்டவர்களிடம் தெள்ளத் தெளிவாக விளக்கியிருக்கிறார். அது மட்டுமல்ல சமாதியில் இருந்தபடியே சூட்சும உடலுடன் தம்மைப் பற்றிய நூலுக்கு முன்னுரையும் வழங்கியிருக்கிறார்.
கைபட்டாலே பொடியாக நொறுங்கும் பழைய பிரதி ஒன்றில் குழந்தையானந்த சுவாமிகளின் சரித்திரம் அச்சிடப்பட்டுள்ளது. அதில் காணப்படும் முன்னுரை ‘மத்யஸ்தர் மாதுஸ்ரீ சாரதாம்பாள் அம்மையார் மூலமாக யோகபீடத்தில் அருளியது’ என்ற குறிப்பு உள்ளது. நூல் வெளியான சில ஆண்டுகளுக்கு முன்னரே மதுரையில் சமாதியான குழந்தையானந்தா, தற்போது முன்னுரை வழங்கியிருப்பது ஆன்மிக உலகில் ஆச்சரியமில்லை. இவ்வாறு சரீரத்தைத் துறந்த பிறகும் மத்யஸதர் மூலம் எழுதுவது யோகசித்திகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
மதுரை ராமசாமி ஐயருக்கும் தென்காசி திரிபுரசுந்தரிக்கும் பிறந்த குழந்தையானந்த சுவாமிகளின் இயற்பெயர் ராஜகோபாலன். செல்வச் செழிப்பான குடும்பம். அதீத தெய்விக நம்பிக்கை. அன்னதானம், ஏழை எளிய மக்களுக்கு வாரிவழங்கும் சுபாவம் கொண்ட தம்பதிக்கு குழந்தை பாக்கியம் இல்லை.
ஆலயத்தில் வளர்ந்த குழந்தை
ஒருநாள் மீனாட்சி அம்மையின் சந்நிதியில் நின்று, எங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தால் போதும், அந்தக் குழந்தையை உன்னிடமே கொண்டுவந்து விட்டுவிடுகிறோம் என்று வேண்டிக்கொண்டனர். அவ்வாறே குழந்தை பிறந்தது. குழந்தையை கோயிலில் கொண்டுவந்து விட்டனர். குழந்தை ஒன்பது வயதுவரை கோயிலில் வளர்ந்தது. ஆலயத்தில் விளையாடியபடி பக்தர்கள் தரும் பிரசாதத்தைச் சாப்பிட்டு, அங்கேயே உறங்கியது. பின்னாளில் குழந்தையானந்த சுவாமி ‘நான் கடவுளோடு தூங்கியவன்' என்று சிரித்துக்கொண்டே கூறுவது வழக்கம்.
சித்தர்கள் மூலம் யோக மந்திரங்கள், பட்சியோகம், நந்தி வித்தை முதலான சித்திகளைச் சிறுவயதிலேயே கற்றான் சிறுவன் ராஜகோபாலன். இச்சிறுவனை வடநாட்டிலிருந்து கணபதி பாபா என்ற மகான் தனது சீடராக ஏற்று சந்நியாசமும் அளித்தார்.
பின்னர் கணபதி பாபாவுடன் காசிக்குச் சென்று அங்கு பல ஆண்டுகள் வாழ்ந்து சமாதி ஆகி பின்னர் அந்தச் சமாதியிலிருந்து வெளிப்பட்டு த்ரைலிங்க சுவாமிகள் என்ற பெயருடன் 150 ஆண்டுகள் வாழ்ந்ததாகத் தெரிகிறது.
குழந்தை ஆனார்
ஆஜானுபாகுவாக இருந்த சுவாமிகளுக்கு குழந்தை ஒன்று மாலைபோட விரும்பியதால் தன் உருவத்தைக் குறுக்கி குழந்தை எளிதில் மாலை போடும்படியாக ஒன்றே முக்கால் அடி உயரம் உள்ளவரானார். அது முதற்கொண்டு குழந்தையானந்த சுவாமிகள் என்று அழைக்கப்படலானார்.
திருவண்ணாமலையில் குழந்தையானந்த சுவாமிகள் இரண்டாவது சமாதி அடைந்தார். பின்னர் அந்தச் சமாதியிலிருந்து குறுகிய குழந்தை வடிவிலேயே வெளிப்பட்டு மக்களிடையே உலவ ஆரம்பித்தார். பின்னர் அங்கிருந்து காஞ்சிபுரம் சென்று அங்கு பல ஆண்டுகள் இருந்தார். மக்களின் நோய் தீர்ப்பதும், ஆன்மிகக் கருத்துக்களை தம்மை அண்டியவருக்கு உபதேசிப்பதுமாக இருந்தார்.
தென்காசியில் தன் பக்தரான கதிர்வேலன் வீட்டில் மூன்றாவது சமாதியை அடைந்தார். பின்னர் அங்கிருந்து மதுரைக்கு வந்து 1932-ம் ஆண்டு நான்காவது சமாதி கொண்டார்.
குள்ளமான உருவம், எப்போதும் வாயில் சாளவாய் ஒழுகும். பருத்த தொந்தி. கால்களைப் பரப்பியபடி இருகைகளையும் முன்புறம் ஊன்றிக் கொண்டுதான் உட்காருவார். யாரையாவது பார்க்க விரும்பவில்லை என்றால் குப்புறப் படுத்துக்கொண்டு விடுவார். பேச்சிலும் மழலை இருக்கும்.
கஞ்சியே உணவு. காப்பி விரும்பிச் சாப்பிடுவார். இப்போதும் அவர் பக்தர்கள் அவர் படத்துக்கு முன்னால் காப்பியை நிவேதனம் செய்து பருகும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
சலவைத் தொழிலாளிக்கு உபதேசம்
சுவாமிகள் சாப்பிட்டானதும் அவர் உத்தரவுப்படி பக்தி சிரத்தையோடு பெரிய ஞானக் குதம்பை அழுகுணிச்சித்தர், குதம்பைச் சித்தர் பாடல்களை சின்னப்பயல் என்கிற சலவைத் தொழிலாளி படிப்பது வழக்கம். கஞ்சி கொடுத்தால் என் பிள்ளைக்கு முதலில் கொடு என்று சலவைத் தொழிலாளி சாப்பிட்ட பின்னரே அவர் சாப்பிடுவார்.
பக்த சிரோன்மணிகள், பண்டிதர்கள், வேதவிற்பன்னர்கள் என்று பலரும் தமக்கும் இந்த வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்குவார்கள்.
சின்னப்பயலுக்கு மஹாவாக்ய உபதேசம் செய்தார் சுவாமிகள். மஹாவாக்ய உபதேசம் என்பது கிடைத்ததற்கு அரிதானது. குருவிடம் பன்னிரண்டு ஆண்டுகள் பயின்று பக்குவம் பெற்றவர்களுக்கு மட்டுமே மகான்களால் உபதேசிக்கப்படுவது.
எப்போதும் மழலைப் பேச்சு பேசும் குழந்தையானந்த சுவாமிகள், அம்மந்திரத்தை அட்சர சுத்தமாக கணீரென்று உச்சரித்து சின்னப்பயலுக்கு உபதேசம் செய்தார். அவருடன் இருந்த செல்லப்பா சுவாமிக்கும், பரசுராம் அய்யருக்கும் வேறு சில ஓம்கார மந்திரங்களைச் சொல்லிக் கொடுத்து, இதை வீண்செலவு செய்துவிடாதீர்கள். ஆத்ம சாட்சாத்காரத்தை வளர்த்துக்கொள்ளுங்கள் என்று அறிவுரை வழங்கினார்.
நாளைக்குச் சொல்கிறேன்
அரிய வகை மூலிகைகளையும் அவை காணப்படும் இடங்களையும் நன்கறிந்தவர் சுவாமிகள். ஒரு முறை சுருளிமலையில் தான் பார்த்த கொடியின் விசித்திர அமைப்பை சுவாமிகளிடம் விவரித்தார் செல்லப்பா என்கிற சித்த வைத்திய சுவாமிகள்.
‘ஓ அதுவா? அதைக் கிள்ளினால் வருகிற பாலை உண்டாயா?’
‘ஐயோ ஒரே கசப்பாக இருந்ததால் துப்பிவிட்டேன்’.
‘அடடா சாப்பிட்டிருந்தால் 200 வயது வாழலாமே’ என்றார் சுவாமிகள் சிரித்தபடி.
அதை எனக்கு மறுபடி காட்ட முடியுமா என்று கேட்டார் சித்த மருத்துவர்.
நாளைக்குச் சொல்கிறேன் என்று நாள்களைக் கடத்திவிட்டு, பிறகு சித்த மருத்துவர் மனதில் அந்த சிந்தனையே இல்லாமல் பண்ணிவிட்டார்.
பத்தாவது ஓட்டை
ஒரு முறை மதுரையில் ஒரு லாட சன்னியாசி, சுவாமிகளைப் பார்த்துக் கேட்டார்.
ஏன் இப்படி சமாதிகளில் மறைந்த பிறகும், மறுபடி தோன்றுகிறீர்கள்?
‘நான் என்னடா? உன்னைப்போல் ஒன்பது ஓட்டைகளில் அடங்கியவனா? பத்தாவது ஓட்டை செய்துகொண்டு தப்பித்து விடுவேன்' என்றார் சுவாமிகள்.
பிறப்பும் இறப்புமாய் தோன்றி மறையும் மானுடப் பெருங் கூட்டத்தில் எங்கே பிறந்து எந்தப் பெயரில் சுவாமிகள் இப்போது உலவுகிறாரோ யார் அறிவார்?
தஞ்சாவூர்க்கவிராயர்
குழந்தையானந்த ஸ்வாமிகள் இறந்த பாலகனுக்கு 4ஆம் நாள் உயிர் வந்தது
உரை திரு விசாலம் அவர்களுக்கு நன்றிகள்
குழந்தைப் பேறு இல்லாத ஒரு தம்பதி, தங்களுக்குக் குழந்தை பாக்கியம் வேண்டும் என மனமுருகி அம்பிகை மீனாட்சியிடம் வேண்டினர். அத்துடன் இந்த வேண்டுதல் பலித்தால் அந்த குழந்தையைக் கோயிலிலேயே மீனாட்சி அன்னையின் ஆதரவில் விட்டுவிடுவதாகவும் வேண்டிக்கொண்டனர். மனமுருகி வேண்டினால் அன்னை வராமல் இருப்பாளா என்ன! அவர்கள் வேண்டிக்கொண்டதையும் நிறைவேற்றினாள்.
ஆலயத்தில் அந்தத் தாய் தான் சொன்னபடி ராமன் என்ற குழந்தையை விட்டுவிட, ராமன் என்ற பெயர் மாற்றப்பட்டு, ராஜகோபாலன் என்ற பெயரில் கோயிலிலேயே வளர்ந்தான் அந்தச் சிறுவன். கோயிலிலேயே ஒரு பட்டர் கனவில் அம்பாள் வந்து, அவனுக்கு உபநயனம் செய்து வைக்கும்படி கூற, கோயில் பட்டர்களே பூணலும் போட்டு, அந்தச் சம்ஸ்காரத்தை மிகச் சிறப்பாக நடத்தினர்.
ஒரு நாள் காசியிலிருந்து ஒரு மகான், மதுரை மீனாட்சியிடம் வந்தார். துறுதுறுவென்று பல வேலைகள் செய்த ராஜகோபாலனைக் கண்டார். அவன் முகத்தில் இருந்த தேஜசைக் கண்டு வியந்தார். பின் அவனிடம் கேட்டார்.
“மகனே இங்கே வா. நீ யார்? உன் பெயர் என்ன?”
“நான் தான் ராஜகோபாலன். இந்தக் கோயிலிலேயே தான் இருக்கிறேன். என் தாய், இந்த மீனாட்சி”
“ரொம்ப மகிழ்ச்சி. நான் உன்னை என்னுடன் அழைத்துப் போக விரும்புகிறேன். என் சீடனாக ஏற்றுக்கொள்கிறேன். என்னுடன் கிளம்பு.”
அவனும் பெரியவர் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அவருடன் கிளம்பினான். அந்தப் பெரியவர்தான் ஸ்ரீ கணபதி பாபா. அந்த மஹானிடம் பலவும் கற்ற பின், இந்தச் சீடர் இமாலயத்தில் பல இடங்கள் சஞ்சரித்தார். அதற்குப் பின் வந்து தங்கியது, காசி க்ஷேத்திரம். அங்கே அவர் சமாதி நிலை அடைந்து, உள்ளொளியைக் கண்டார்.
திருவண்ணமலையில் பல சித்த புருஷர்கள் உண்டு. அந்த வகையில் இந்த ராஜகோபாலனும் ஒருவர். இங்கும் ஒரு குகையில் அமர்ந்து தியானத்தில் இருந்து, சமாதி நிலையில் பேரானந்தம் பெற்றார். அவர் அங்கிருந்து வெளியே வரும்போது முகத்தில் அத்தனை தேஜஸ். பார்க்க ஒரு குழந்தையைப் போல் காட்சியளித்தார். குட்டையாகவும் பெரிய தொந்தியுடன் வாயில் எச்சில் வழிந்தவண்ணம் சிறு குழந்தையைப் போல் இருக்க, அவருடைய பெயர், குழந்தையானந்த ஸ்வாமிகள் என்று ஆனது.
இவரை ராஜபூஜித ஸ்வாமிகள் என்றும் சொல்வார்கள். ஏனென்றால் பல ராஜாக்கள். நேபாளம், பரோடா, திபெத், காஷ்மீர் போன்ற இடங்களை ஆண்டவர்கள், இவரைப் பூஜித்தார்கள்.
சுவாமிகள் தென்காசிக்கும் சென்று, மூன்றாம் முறை சமாதியடைந்து ஜோதியாக வெளியே வந்தாராம். இவர் கடைசியில் சுற்றிய இடங்கள், பழனி திண்டுக்கல், தஞ்சாவூர், உடுமலைப்பேட்டை.
ஸ்வாமிகள் பல அற்புதங்களைச் செய்திருக்கிறார். அதில் ஒன்றைப் பார்ப்போம்.
திண்டுக்கல்லில் நடந்த சம்பவம் இது.
மண் தெருவில் சில குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். அதில் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன், திடீரென்று மயக்கம் போட்டுக் கீழே சாய்ந்தான். எல்லோரும் கூடி அவனை எழுப்பினார்கள். ஒரு சிலர் அவன் முகத்தில் தண்ணீர் தெளித்தார்கள். அப்போதும் அவன் எழுந்திருக்காதலால் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். டாக்டர் அந்தச் சிறுவனின் உயிர் பிரிந்துவிட்டது என்றார். அவன் பெற்றோர்கள் துக்கம் தாங்காமல் அழுதபடி இருக்க, அந்த நேரத்தில் குழந்தை ஸ்வாமிகள் அங்கு வந்தார். விவரம் அறிந்து பின் பெற்றோர்களிடம் சொன்னார்.
வருந்தாதீர்கள். இந்தப் பையனை என் அறையில் ஒரு மூன்று நாள் வரை பூட்டி வைத்து விடுங்கள்.”
இதைச் சொல்லியபடியே ஸ்வாமிகள் அங்கிருந்து நகர்ந்தார்.
மூன்று நாட்கள் ஆயின. நான்காம் நாள், ஸ்வாமி வந்தார். தன் கதவைத் திறந்தார். பையன் அங்கு உயிர்ப் பெற்றெழுந்து, “ஸ்வாமி நான் ஆற்றில் குளித்துவிட்டு வருகிறேன்” என்றபடி ஓடினான்.
இதைப் பார்த்த பலரும் அப்படியே ஸ்தம்பித்து நின்றனர்.
இவர் கடைசியில் சமாதியடைந்து, ஒளியுடன் கலந்த இடம், மதுரை. இவர் பிறந்த இடமும் மதுரைதான். இவருக்காக அங்கு அதிஷ்டானம் கட்டி, சுவாமிகளின் அம்பாளான ஸ்ரீ சக்ரரூபிணிக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெறுகிறது. இதைப் போல் சித்தர்கள் பலர் இருந்த நாட்டில் நாம் இருப்பது நாம் செய்த பாக்கியமன்றோ?

Dear All,Greetings!Wishing you all a Happy Diwali. Have a great celebration
23/10/2022

Dear All,
Greetings!
Wishing you all a Happy Diwali. Have a great celebration

தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்
23/10/2022

தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்

பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்..நட்ச்சத்திரம் இருக்கிறது என்பது எல்லோர...
21/10/2022

பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்..

நட்ச்சத்திரம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் பகலிலே பார்க்கிற ஓருவருக்கு நட்ச்சத்திரம் தெரியாது.

சூரியன் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், இரவிலே பார்த்தால் சூரியன் தோன்றாது.

இரவிலே சூரியனை பார்த்து தவறாக சூரியன் என்பதே இல்லை என சொல்வது எவ்வளவு அவசர புத்தியோ... அவ்வளவு அவசர புத்திதான் தனக்கு நேரில் தெரியாதது அத்தனையும் இல்லை என வாதிக்க முன்வருவது.

எல்லாம் எல்லாருக்கும் தெரிகிற நிலைமையில் அமைந்தது அல்ல உலகம்.

உதாரணாமாக உங்களுடைய சரீரத்தையே... நீங்கள் பார்த்துக் கொள்வீர்களானால்

சரீரத்தில் இருக்கின்ற கால்,கை முதலியவை எல்லாம் நீங்கள் பார்க்க முடியும், அதே நேரத்தில் கண்களை நீங்களே பார்க்க வேண்டும் என விரும்பினால் பார்க்க முடியுமா..?முடியாது !

அதற்காக ஒருவன் அவசரப்பட்டு ...

என் கையை பார்த்தேன் இதோ இருக்கிறது,
ஆகையால் எனக்கு 'கை' உண்டு.

என் காலை பார்த்தேன் இதோ இருக்கிறது,
ஆகையால் எனக்கு 'கால்' உண்டு.

நான் என் கண்ணை பார்க்க நினைக்கிறேன் அது தெரியவில்லை, ஆகையால் எனக்கு கண்ணில்லை என்று பேசலாமா..? அது தவறு !

கண்ணாடியில் பார்த்தால் கண்களின் பிம்பம் தெரியும்...! அதைப்போல் விக்ரஹங்கள் கடவுளின் பிம்பமாக இருக்கிறது.

இதோ இங்கு ரோஜாப்பூ மாலை இருக்கிறது..

இது என்ன பூ எனக்கேட்டால்
அதன் பெயரை சொல்லலாம்..!
நிறத்தை கேட்டால் நிறத்தையும் சொல்லலாம்
இது எந்த இடத்தில் கிடைக்கும் என்வும் சொல்லிவிடலாம்..ஆனால்..

அதன் வாசம் எப்படியிருக்கும் எனக்கேட்டால் "முகர்ந்து" பார் என்றுதான் சொல்லமுடியும்!

கடவுள் எப்படியிருப்பார் என்று கேட்டால்..உணர்ந்துப்பார் என்றுதான் சொல்லமுடியும்!

( பசும்பொன் தேவர் - 1959-ல் பொள்ளாச்சி சிறீ குடலுருவி மாரியம்மன் கோவிலில் பேசியது.)

பால் ப்ரண்டன் காஞ்சி மஹா பெரியவரின் அறிவுறுத்தலின் படி ரமண மகரிஷியை சந்திக்கச் சென்றார்.ரமணாசிரமத்தின் ஒரு சிறிய ஹாலில் ...
19/10/2022

பால் ப்ரண்டன் காஞ்சி மஹா பெரியவரின் அறிவுறுத்தலின் படி ரமண மகரிஷியை சந்திக்கச் சென்றார்.

ரமணாசிரமத்தின் ஒரு சிறிய ஹாலில் ரமண மகரிஷி அமர்ந்திருக்க அவர் முன் சிலர் அமைதியாக அமர்ந்திருந்தனர். ரமண மகரிஷி பால் ப்ரண்டனைப் பார்த்தார். மிகச் சாதாரணமான தோற்றம் கொண்ட ரமண மகரிஷியின் பார்வை சாதாரணமானதாக இருக்கவில்லை. அவர் பார்வை காந்தத் தன்மை கொண்டதாக இருந்தது. பால் ப்ரண்டன் தன் பார்வையை மகரிஷியிடமிருந்து விலக்க முடியாதவராக இருந்தார். திடீரென்று தன் பார்வையை பால் ப்ரண்டனிடமிருந்து விலக்கிக் கொண்டு வெற்றிடத்தைப் பார்க்க ஆரம்பித்தார்.

ஆரம்பத்தில் பால் ப்ரண்டன் தான் புறக்கணிக்கப் பட்டது போல் உணர்ந்தார். அங்கு அமர்ந்திருந்த மற்றவர்களுடன் தானும் உட்கார்ந்து கொண்டார். சிறிது நேரத்தில் ஒருவித அசாதாரண சக்தியலை அவரை ஆட்கொண்டது. தன்னை மகரிஷி புறக்கணித்ததாக எண்ணிய எண்ணம் மெள்ள விலகியது. ரமண மகரிஷி எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாலும் அவருடைய ஞான சக்தி அந்த இடமெல்லாம் வியாபித்திருந்ததாக பால் ப்ரண்டன். அவர் மனதில் ரமண மகரிஷியிடம் கேட்க எண்ணியிருந்த கேள்விகள் கூட அவர் மனதில் இருந்து தானாக உதிர்ந்தன. வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பேரமைதியை பால் ப்ரண்டன் அந்த இடத்தில் உணர்ந்தார். கேள்விகள் இல்லாத பதில் தேவைப்படாத எதனாலும் பாதிக்கப்படாத ஒரு ஆனந்த நிலையை பால் ப்ரண்டன் அனுபவித்தார்.

மற்றவர்கள் காட்டிய அபார சக்திகள் எல்லாம் இந்த அமைதியின் முன் ஒரு பொருட்டாகவே பால் ப்ரண்டனுக்குத் தோன்றவில்லை. தான் தேடி வந்த யோகியை அந்தக் கணமே பால் ப்ரண்டன் அடையாளம் கண்டார். அவருடைய தேடல் முடிவுக்கு வந்ததாக அவர் உணர்ந்தார். அங்கேயே சில காலம் தங்க பால் ப்ரண்டன் தீர்மானித்தார்.

முதல் முதலில் ரமண மகரிஷியிடம் பேச வாய்ப்பு கிடைத்த போது பால் ப்ரண்டன் சொன்னார். "ஸ்வாமி, நான் மேலை நாட்டுத் தத்துவங்கள் நிறையப் படித்தவன். அவற்றில் உள்ள கருத்துக்களை ஆழமாகத் தனிமையில் சிந்தித்தவன். மேலை நாடுகளின் நகர சொகுசான வாழ்க்கையின் பிடியில் அகப்பட்டு ஆன்மீகத் தேடல்களை மறந்ததும் உண்டு. ஒரு கட்டத்தில் அந்தத் தத்துவங்களில் பல கேள்விகளுக்குப் பதில் இல்லை என்று உணர்ந்து கீழை நாடுகளின் பக்கம் என் கவனம் திரும்பியது.''

மகரிஷி புரிகிறது என்பது போல் தலையசைத்தார்.

பால் ப்ரண்டன் தயக்கமில்லாமல் தனக்கு மனதில் பட்டதை அப்படியே சொன்னார். "இங்கும் பல தத்துவங்கள், பல சித்தாந்தங்கள், பல வாதங்கள் எல்லாம் ஏராளமாக இருக்கிறது. இதையெல்லாம் கேட்டும் படித்தும் நான் சலித்து விட்டேன். நான் மதவாதி அல்ல. மதங்கள் என்ன சொல்கின்றன என்பதை அறிவதும் என் நோக்கமல்ல. நம் கண்ணிற்குத் தெரிகிற இந்த மனித வாழ்க்கைக்கு அப்பாலும் ஏதாவது இருக்கிறதா? இருந்தால் நான் அதை அடைவது எப்படி?"

அருகிலிருந்த சிலர் பால் ப்ரண்டனுடைய வெளிப்படையான கேள்வியைக் கேட்டு திகைத்தனர். மகரிஷி அவரையே பார்த்தாரே ஒழிய பதிலேதும் சொல்லவில்லை. பால் ப்ரண்டன் தொடர்ந்து தன் கருத்தைச் சொன்னார். "அறிவுக்குப் பெயர் போன எங்கள் விஞ்ஞானிகள் கூட இந்த விஷயத்தைப் பொறுத்தவரை அறிந்தது குறைவு என்று கைவிரித்து விட்டார்கள். உங்கள் புண்ணிய தேசத்தில் இதற்கான பதிலை நான் தேடி வந்திருக்கிறேன். தயவு செய்து சொல்லுங்கள் மெய்ஞானம் பெற நீங்கள் எனக்கு உதவ முடியுமா? இல்லை நான் தேடி வந்ததே வெறும் கானல் நீரா? இதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்"

சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு மகரிஷி கேட்டார். "நீங்கள் நிறைய முறை 'நான்' என்று சொல்லி விட்டீர்கள். எனக்குச் சொல்லுங்கள் "யார் அந்த நான்?"

பால் ப்ரண்டனுக்கு முதலில் விளங்கவில்லை. இதென்ன கேள்வி என்று நினைத்தவர் தன்னைக் கையால் சுட்டிக் காட்டி தன் பெயரைச் சொல்லி இது தான் நான் என்று சொன்னார்.

"இது உங்கள் உடல். மீண்டும் கேட்கிறேன். 'யார் அந்த நான்?"

பால் ப்ரண்டனுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை.

மகரிஷி சொன்னார். "அந்த நானை அறியுங்கள். உங்கள் எல்லாக் கேள்விகளுக்கும் உடனடியாக விடை கிடைக்கும்"

"அதை எப்படி அறிவது"

"உங்களுடைய உண்மைத் தன்மையை ஆழமாக சிந்திப்பதாலும் இடைவிடாத தியானத்தாலும் அறியலாம்"

"நான் நிறையவே தியானம் செய்திருக்கிறேன். ஆனால் எந்த முன்னேற்றமும் எனக்குத் தெரியவில்லை"

"ஆன்மீக மார்க்கத்தில் முன்னேற்றம் என்பதை எளிதாகக் கண்டு பிடிக்க முடியாது"

"இதில் ஒரு குரு தேவையா?

"இந்த தேடலுக்குத் தேவையானவற்றை குரு தரலாம். ஆனால் இதை அவரவரே தனிப்பட்ட அனுபவத்தால் தான் உணர முடியும்"

"இதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும்?"

"இது தனி மனிதர்களின் பக்குவத்தைப் பொறுத்தது. தீப்பிடிக்க வெடிமருந்துக்கு நொடி நேரம் போதும். ஆனால் நிலக்கரிக்குத் தீப்பிடிக்க அதிக நேரம் தேவைப்படுகிறது.

அருணாசலேஷ்வரா...

Jai shree Ram
18/09/2022

Jai shree Ram

நாம் தினந்தோறும் தெரிந்தும் தெரியாமலும் எத்தனையோ தவறுகள் செய்கிறோம்.மனதால் கெட்டதை நினைக்கிறோம். வாக்கால் மற்றவர்களைப் ப...
14/09/2022

நாம் தினந்தோறும் தெரிந்தும் தெரியாமலும் எத்தனையோ தவறுகள் செய்கிறோம்.மனதால் கெட்டதை நினைக்கிறோம். வாக்கால் மற்றவர்களைப் புண் படுத்துகிறோம்.

சுயநலம் அதிகரிக்கும்போது செய்யும் காரியங்கள் தவறு மயமாக ஆகிவிடுகின்றன. கவனம் இப்படித் திசைமாறிப் போகும் போது என்றாவது ஒரு நாள் அதற்கான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்.

நம்மைத் தினமும் காப்பாற்றும் தெய்வத்தை நினைக்காமலும் வழிபடாமலும் காலத்தை வீணாகப் போக்கும் பிழை அந்த தெய்வத்தால் மட்டுமே மன்னிக்கக் கூடியது.

அப்பிழைகளை நமக்குப் புரியும்படி ஒரே பாடலில் எளிமையாகக் காட்டுகிறார் பட்டினத்தார் .இப்பாடல் காஞ்சி ஏகாம்பரநாத சுவாமி மீது பாடப்பெற்றது.

*கல்லாப் பிழை:*

*இறைவனைப் பற்றிய நூல்களைப் படித்து அதன்படி வாழ்க்கையை நடத்தாமல் இருப்பது ஒரு பிழை. இதையே கல்லாப் பிழை என்கிறார் பட்டினத்தார்.*

*கருதாப்பிழை:*

*இறைவனைப் பற்றிய எண்ணமே இல்லாமல் வாழ்வதும் பிழையே.*

*கசிந்துஉருகி நில்லாப்பிழை:*

*இறைவனது கருணையை எண்ணி எண்ணிக் கசிந்து மனம் உருகி வாழாவிட்டால் அதுவும் பிழையே.*

*நினையாப்பிழை:*

*இறைவனை மறப்பது நன்றி மறப்பதற்கு சமம். அப்படிப்பட்ட நாட்கள் பிறவாத நாட்கள் என்கிறார் அப்பர் சுவாமிகள்.*

*பஞ்சாக்ஷரஜபம் செய்யாதபிழை:*

*முன்பெல்லாம் பஞ்சாக்ஷர ஜபம் செய்யாத வீடுகள் மிகக் குறைவாக இருந்தது. அதற்கு மேல் மந்திரம் வேறு எதுவும் இல்லாததால் நான்கு வேத நடுவில் இருக்கும் மகிமை உள்ள இந்த மந்திரத்தைப் பெரியோர்கள் ஜபிக்கும்படிச் சொன்னார்கள் .ஆதலால் இதைச் செய்யாமல் இருப்பது பெரிய பிழை ஆகிறது.*

*துதியாப்பிழை:*

*தோத்திரங்களால் துதித்தல் மிகவும் முக்கியமானது. தேவர்களும் அசுரர்களும் முனிவர்களும் பிறரும் செய்த தோத்திரங்கள் ஏராளமாகப் புராணங்களில் காணப்படுகின்றன. இறைவனை அவனது நாமங்களால் துதித்தால் பிழைகளை மன்னித்து அருள்வான். அப்படித் துதிக்காமல் இருப்பது தவறு அல்லவா?*

*தொழாப்பிழை:*

*தெய்வம் நமக்குத் தந்த கைகள் அவனைத் தொழுவதற்கே ஏற்பட்டவை. மனிதர்களைத் தொழுதுவிட்டுத் தெய்வத்தை தொழாதவர்களும் இருக்கிறார்கள். இதனால் பெரிய பிழை செய்தவர்கள் ஆகிறார்கள். இப்படியாகப் பல பிழைகளை நாள்தோறும் செய்கிறோம். இதைத் தெய்வத்தைத் தவிர யாரால் மன்னிக்க முடியும்? இப்பொழுது முழுப் பாடலையும் பார்ப்போம்.*

*"கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி*

*நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்*

*நினஞ்செழுத்தைச் சொல்லாப் பிழையும்*

*துதியாப் பிழையும் தொழாப் பிழையும்*

*எல்லாப் பிழையும் பொறுத்து அருள்வாய் கச்சி ஏகம்பனே."*

என்பது அந்த அற்புதமான பாடல். தினமும் இப்பாடலைச் சொல்வதை இன்று முதல் வழக்கமாகக் கொள்வோமா?

सरसंघचालक डॉ. मोहन भागवत जी, सरकार्यवाह दत्तात्रेय होसबाले जी की विनम्र श्रद्धांजलि...पूज्य जगद्गुरु शंकराचार्य स्वामी स...
11/09/2022

सरसंघचालक डॉ. मोहन भागवत जी, सरकार्यवाह दत्तात्रेय होसबाले जी की विनम्र श्रद्धांजलि...

पूज्य जगद्गुरु शंकराचार्य स्वामी स्वरूपानंद सरस्वती महाराज का शरीर पूर्ण होने का दुःखद समाचार मिला. श्री द्वारका के शारदा पीठ के शंकराचार्य जी के ब्रह्मलीन होने से धर्म क्षेत्र के तपस्वी एवं परम ज्ञानी आचार्य अब अपने मध्य सशरीर नहीं रहे. समस्त हिन्दू समाज एवं समूचा राष्ट्र उनके मार्गदर्शन से वंचित रहेगा. ईश्वर उन्हें अपने श्री चरणों में अनंत व अखंड वास प्रदान करें.

ॐ शान्तिः

मोहन भागवत, सरसंघचालक
दत्तात्रेय होसबाले, सरकार्यवाह
राष्ट्रीय स्वयंसेवक संघ

An epitome of craftsmanship and that too 1800 years ago!!This depicts how advanced we were without the machines.Jambukes...
11/09/2022

An epitome of craftsmanship and that too 1800 years ago!!

This depicts how advanced we were without the machines.

Jambukeswarar Temple in Tiruchirapalli, Tamil Nadu, India

09/09/2022
 #சுவாமி_சிவானந்தர் 1. சுவாமி சிவானந்தர் 1887 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் நாள்  #திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள  #பத்தமடை எ...
08/09/2022

#சுவாமி_சிவானந்தர்

1. சுவாமி சிவானந்தர் 1887 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் நாள் #திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள #பத்தமடை என்ற ஊரில் பிறந்தார்.

2. சிறு வயதிலேயே #கல்வி, #கலை, #விளையாட்டு, #ஆன்மிகம் போன்ற அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கினார்.

3. #மருத்துவம்-ப் படிப்பு படித்து #மலேசியாவில் #மருத்துவராகப்_பணிபுரிந்தார். ஏழை எளியவர்களுக்கு இலவச சிகிச்சை நிறைய செய்தார்.

4. அக்காலத்தில் பணிகளுக்கிடையே #சத்சங்கம், #பஜனை ஆகியவற்றிலும் ஈடுபாடு காட்டி வந்தார்.

5. சில ஆண்டுகளில் ஆன்மீக நாட்டம் மேலோங்க, தன் மருத்துவப் பணியைத் துறந்து இந்தியா திரும்பி, கடுமையான தவத்திற்குப் பிறகு ரிஷிகேசத்தில் தெய்வ நெறிக் கழகம் என்ற ஆசிரமம் தொடங்கி, ஆன்மீக வேட்கை கொண்ட இளைஞர்களுக்குத் தன்னுடைய கருத்துக்களை சொற்பொழிவுகள், புத்தகங்கள் வாயிலாகவும், மற்றும் சுற்றுபயணங்கள்
மூலமாகவும் பரப்பினார்.

6. மனிதநேயம் மிகுந்த வாழ்க்கையை வாழ்ந்தவர் சிவானந்தர். 'வாழ்வின் இறுதி நிமிடம் இது' என்று வழி தெரியாமல் நின்றவர்கள்கூட, அவரது வழிகாட்டுதலால் வாழ்க்கையின் உன்னதத்தை அறிந்து மீண்டிருக்கிறார்கள்....

7. முன்னாள் #குடியரசுத்தலைவர் #அப்துல்கலாம், #சுவாமி_சிவானந்தரையே தனது குருவாகக் கூறுவார். அப்துல் கலாமின் வாழ்க்கையிலும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் சுவாமி சிவானந்தர்.

08.09.2022

08/09/2022

கைவினைத்திறனின் ஒரு உருவகம் அதுவும் 1800 ஆண்டுகளுக்கு முன்!! #இயந்திரங்கள் இல்லாமல் நாம் எவ்வளவு முன்னேறியுள்ளோம் என்பதை...
06/09/2022

கைவினைத்திறனின் ஒரு உருவகம் அதுவும் 1800 ஆண்டுகளுக்கு முன்!!
#இயந்திரங்கள் இல்லாமல் நாம் எவ்வளவு முன்னேறியுள்ளோம் என்பதை இது காட்டுகிறது.இப்போது என் கேள்வி என்னவென்றால்-
இந்த நூற்றாண்டில் எந்த ஒரு கலைஞனும் இப்படி ஒரு கடினமான பாறையில் அதாவது கிரானைட்டில் வடிவமைக்க முடியுமா?
#தமிழ்நாடு, #திருச்சிராப்பள்ளி யில் உள்ள #ஜம்புகேஸ்வரர்_கோவில்.

06.09.2022

வ.உ.சிதம்பரம்பிள்ளை1. வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை செப்டம்பர் 5 1872 தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் பி...
05/09/2022

வ.உ.சிதம்பரம்பிள்ளை

1. வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை செப்டம்பர் 5 1872 தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் பிறந்தவர்.

2. கிறிஸ்தவ பிரிட்டிஷ் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர்.

3. இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது.

4. வ.உ.சிதம்பரம்பிள்ளை தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை உடையவர்.

5. இவரது வாழ்க்கை உயர்ந்த ஒழுக்கமும், நேர்மையும், ஆற்றலும் நிறைந்ததாக இருந்தது.

6. 1895ல் ஒட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் தொழிலைத் துவங்கினார்.

7. வ.உ.சி. பெரும்பாலான வழக்குகளில் வெற்றி பெற்றார். சில வழக்குகளில் இரு கட்சியினரும் சமாதானமாகப் போகும்படி செய்தார்.

8. வ.உ.சி. தூத்துக்குடியிலும் திருநெல்வேலியிலும் மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவராக விளங்கினார். அவர் ஆளுமை மிக்க மனிதர். அவர் "சுதேசி பிரச்சார சபை", "தர்ம சங்க நெசவு சாலை", "தூத்துக்குடி கைத்தொழில் சங்கம்", "சுதேசிய பண்டக சாலை", "வேளாண் சங்கம்" போன்றவற்றை ஏற்படுத்தினார்.

9. நெல்லை மாவட்டத்தில் ஆங்கிலேய கிறிஸ்தவ அடக்குமுறையை கண்டித்து நடைபெற்ற கூட்டங்களில் பேசியதற்காக ராஜ துவேஷ வழக்கு போட்டு இரண்டு ஜென்ம தண்டனை விதித்தது ஆங்கில கிறிஸ்தவ அரசு .

10. கோவை மத்திய சிறையில் செக்கிழுத்தார் அந்த செம்மல்

11. அவர் செக்கிழுப்பதை ஏளனம் செய்த ஆங்கில அதிகாரியிடம் அவர் சொன்னது செக்கையா இழுக்கிறேன் எனதருமை பாரதத் தாய் அமர்ந்திருக்கும் திருத் தேரை அல்லவா இழுக்கிறேன் என்றார்.

#வஉசிதம்பரம்பிள்ளை

  in   Campus .International Ganesh Festival on 31st August 2022 at Rangsit University Campus (Students Centre). The pur...
05/09/2022

in Campus
.

International Ganesh Festival on 31st August 2022 at Rangsit University Campus (Students Centre). The purpose of this grand annual (Birthday of Lord Ganesha or Phra Phikanet) festival and promote historical social and cultural relations between India and
Thailand. This year, the festival activities are also aimed to pray for the well-being of the people around the world who are facing adversities due to COVID-19 pandemic.

   at Vyasa Vidya Peetham Kerala  is an annual Malayali harvest festival.
04/09/2022

at Vyasa Vidya Peetham Kerala
is an annual Malayali harvest festival.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Ramnaath Raja posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Convenience Store?

Share