10/09/2024
குடல் பாதுகாப்பு:
குடலை பாதுகாக்கும் உணவுகளில் தலை சிறந்த உணவு வில்வ பழம் ஆகும். இது நாம் உண்ணும் உணவினை நன்றாக ஜீரணிக்க உதவி, குடலை ஆரோக்கியமாக பாதுகாக்க உதவுகிறது.
மலச்சிக்கலைப் போக்கும்:
சிலருக்கு எடுத்துக் கொண்ட உணவு சரியாக ஜீரணம் ஆகாமல் இருப்பதால் மலச்சிக்கல் ஏற்படும். அதற்கு, வில்வ பழத்தின் ஓட்டை நீக்கிவிட்டு சதைப்பகுதியை மட்டும் விதை இல்லாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் பால், சர்க்கரை போன்றவற்றை சேர்த்து வில்வ பழத்தை நன்றாக மிக்ஸியில் அரைத்து சர்பத் தயார் செய்து கொள்ளவேண்டும். இந்த சர்ப்பத்தினை அருந்திவர குடல் சுத்தமாகி உடம்புக்கு ஊட்டம் கொடுத்து மலச்சிக்கலையும் போக்கும். சீதபேதியையும் குணமாக்கும் சக்தி இதற்கு உண்டு.
வயிற்றுப் பிரச்சனை:
சிலருக்கு திடீரென வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் உருவாகும். அந்த சமயத்தில் வில்வ பழத்தோடு நாட்டு சக்கரைக்கு பதிலாக பனங்கற்கண்டு சேர்த்து ஜூஸாக அருந்திவந்தால் வயிற்றுப் பிரச்சனையை தீர்க்கும்.
கல்லீரலை பாதுகாக்கும்:
கல்லீரலை பாதுகாப்பதில் வில்வப் இலைக்கு முக்கிய பங்கு உண்டு. வில்வ இலையை நன்றாக அரைத்து ஒரு நெல்லிக்கனி அளவு எடுத்துக்கொண்டு அதனை சாப்பிட வேண்டும். தேவையான அளவு தண்ணீர் குடித்துக் கொள்ள வேண்டும். பிறகு பால் அல்லது மோர் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் கல்லீரல் பலம் பெற்று ஆரோக்கியமாக இருக்கும். மேலும் மஞ்சள் காமாலை நோயினை போக்கும். .dharaniherbbals.in