Nalam nattu marunthu kadai, viralimalai.

  • Home
  • Nalam nattu marunthu kadai, viralimalai.

Nalam nattu marunthu kadai, viralimalai. Health Care, Skin Care and Skin Care.

 #பாசிப்பருப்பு  இது தமிழ்நாட்டில் பாரம்பரியமாக பெண்கள் அழகுப்படுத்திக்கொள்ள பயன்படுத்தி வந்த பொடியாகும்.இப்போதுபோன்று ம...
13/05/2024

#பாசிப்பருப்பு
இது தமிழ்நாட்டில் பாரம்பரியமாக பெண்கள் அழகுப்படுத்திக்கொள்ள பயன்படுத்தி வந்த பொடியாகும்.

இப்போதுபோன்று முகத்தில் இறந்த செல்களை நீக்கவும், சன் டான் நீங்கவும், முகப்பருக்களை வெளியேற்றவும், முகத்தை பளபளப்பாகவும் வைத்திருக்க என்று தனி தனி பொருளெல்லாம் கிடையாது.

ஆனால் ஆச்சரியப்படுத்தும் விதமாக இந்த பாசிப்பருப்பு ஒன்றே இவை அனைத்தையும் செய்துவிடுகிறது என்பதால் பெரும்பாலும் இயற்கை அழகு கலை நிபுணர்கள் இதையே தேர்வு செய்கிறார்கள்.

பாசிப்பருப்பு ஆன்டிஆக்ஸிடண்ட் பண்புகளை கொண்டிருக்கிறது. இவை சருமத்தை சுத்தம் செய்து பளிச் என்று வைக்க உதவுகிறது.

தேவையற்ற முடிகளை அகற்ற உதவும் பொருள்களில் இதற்கும் முக்கிய பங்குண்டு. # Dharani Herbbals
See

இந்தியாவிலே முதன்முறையாக வில்வப்பழ சர்பத்...தயாரிப்பு :  #தரணி_ஹெர்பல்ஸ்..  #புஞ்சைபுளியம்பட்டி....குடல் பாதுகாப்பு:குடல...
08/05/2024

இந்தியாவிலே முதன்முறையாக வில்வப்பழ சர்பத்...
தயாரிப்பு : #தரணி_ஹெர்பல்ஸ்.. #புஞ்சைபுளியம்பட்டி....
குடல் பாதுகாப்பு:
குடலை பாதுகாக்கும் உணவுகளில் தலை சிறந்த உணவு வில்வ பழம் ஆகும். இது நாம் உண்ணும் உணவினை நன்றாக ஜீரணிக்க உதவி, குடலை ஆரோக்கியமாக பாதுகாக்க உதவுகிறது.
மலச்சிக்கலைப் போக்கும்:
சிலருக்கு எடுத்துக் கொண்ட உணவு சரியாக ஜீரணம் ஆகாமல் இருப்பதால் மலச்சிக்கல் ஏற்படும். அதற்கு, வில்வ பழத்தின் ஓட்டை நீக்கிவிட்டு சதைப்பகுதியை மட்டும் விதை இல்லாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் பால், சர்க்கரை போன்றவற்றை சேர்த்து வில்வ பழத்தை நன்றாக மிக்ஸியில் அரைத்து சர்பத் தயார் செய்து கொள்ளவேண்டும். இந்த சர்ப்பத்தினை அருந்திவர குடல் சுத்தமாகி உடம்புக்கு ஊட்டம் கொடுத்து மலச்சிக்கலையும் போக்கும். சீதபேதியையும் குணமாக்கும் சக்தி இதற்கு உண்டு.
வயிற்றுப் பிரச்சனை:
சிலருக்கு திடீரென வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் உருவாகும். அந்த சமயத்தில் வில்வ பழத்தோடு நாட்டு சக்கரைக்கு பதிலாக பனங்கற்கண்டு சேர்த்து ஜூஸாக அருந்திவந்தால் வயிற்றுப் பிரச்சனையை தீர்க்கும்.
கல்லீரலை பாதுகாக்கும்:
கல்லீரலை பாதுகாப்பதில் வில்வப் இலைக்கு முக்கிய பங்கு உண்டு. வில்வ இலையை நன்றாக அரைத்து ஒரு நெல்லிக்கனி அளவு எடுத்துக்கொண்டு அதனை சாப்பிட வேண்டும். தேவையான அளவு தண்ணீர் குடித்துக் கொள்ள வேண்டும். பிறகு பால் அல்லது மோர் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் கல்லீரல் பலம் பெற்று ஆரோக்கியமாக இருக்கும். மேலும் மஞ்சள் காமாலை நோயினை போக்கும்.
See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

ஆவாரம் பூ டீஇதயத்துக்கு ஆரோக்கியத்தை தரும்  #ஆவாரம்பூ_டீ-  #பயன்கள்: #மலச்சிக்கல்:மலச்சிக்கலை நாம் மிகச் சாதாரணமாக விட்ட...
04/05/2024

ஆவாரம் பூ டீ
இதயத்துக்கு ஆரோக்கியத்தை தரும் #ஆவாரம்பூ_டீ- #பயன்கள்:

#மலச்சிக்கல்:

மலச்சிக்கலை நாம் மிகச் சாதாரணமாக விட்டுவிடுகிறோம். ஆனால் இந்த மலச்சிக்கல் தான் பல நோய்கள் உண்டாவதற்கு அடிப்படை காரணமாக அமைகின்றது. ஒரு நாளைக்கு இரண்டு முறை உடலில் இருந்து மலம் வெளியேறினாலே போதும் நம்முடைய உடலில் நோய்கள் அண்டாது.
மலச்சிக்கல் பிரச்சினை இருக்கிறவர்கள் தினமும் இரண்டு வேளை ஆவாரம்பூ டீ போட்டு குடித்தால், இந்த பிரச்சினையே அடியோடு காணாமல் போய்விடும்.

#சருமத்_தொற்றுகளுக்கு:

நம்முடைய சருமத்திலும் பூஞ்சைத் தொற்றுக்கள் உண்டாகும். இதுபோல் உண்டாகிற சரும பூஞ்சைத் தொற்றை சரி செய்ய வேண்டுமென்றால், ஆவாரம்பூ டீ செய்து உள் மருந்தாக குடிக்கலாம்.

#சிறுநீர்த்தொற்று:

ஆவாரம்பூ டீ செய்து குடித்தால் சிறுநீர் பாதையில் உண்டாகும் தொற்று நோய்கள் குணமடையும். உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
இரத்தம் பெருகும். உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும். சிறுநீர் கடுப்பு குணமடையும்.

காய்ச்சலுக்கு:

அதிகப்படியான மருத்துவ குணங்கள் கொண்ட ஆவாரம் பூ டீ (avarampoo tea) தினமும் தொடர்ந்து பருகி வந்தால், காலரா மற்றும் டைபாய்டு போன்ற நோய்கள் குணமடையும். தீராத காய்ச்சலும் தீர்ந்து போகும்.

#நீரிழிவு_நோய்:

இப்போதேல்லாம் பலர் சிறு வயதிலேயே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, அவதிப்படுகிறார்கள். அப்படி சர்க்கரை நோயால் அவதிப்படுகிறவர்களுக்கு ஆவாரம் செடியினுடைய பட்டையானது சிறந்த தீர்வாக இருக்கும்.
ஆவாரம் பட்டையை வெந்நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து குடித்து வர, சர்க்கரை நோய் மட்டுமல்ல, மேகவெட்டு, சிறுநீரில் ரத்தம் கசிதல் ஆகிய பிரச்சினைகளையும் தீர்க்கும்.
இதற்கு காய்ச்சும்போது, பட்டையைப் போட்டு, நன்கு தண்ணீர் ஊற்றி அந்த தண்ணீர் பாதியாக சுண்டும் வரை காய்ச்ச வேண்டும்.

#வயிற்றுப்புண் குணமாக:

காய வைத்து பொடி செய்த ஆவாரம் பூ பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டிப் பருகி வந்தால், உடல்சூடு, பித்தம், நீர்க்கடுப்பு, அதிக உதிரப் போக்கு ஏற்படுதல், ஒழுங்கற்ற மாதவிலக்கு, குடல்புண், வயிற்றுப்புண் என வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனையையும் இந்த ஆவாரம்பூ டீ (avarampoo tea) குணப்படுத்திவிடும்.

Dharani Herbbals

Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti

See less
— feeling relaxed in Tamil Nadu. See less

மலைத்தேனில் மூலிகை மருத்துவ குணம் சேர்ந்து இருப்பதால் மருந்து பொருட்களுடன் சேர்ந்து உண்பதற்கு ஏற்றது. பித்தம், வாந்தி, க...
02/05/2024

மலைத்தேனில் மூலிகை மருத்துவ குணம் சேர்ந்து இருப்பதால் மருந்து பொருட்களுடன் சேர்ந்து உண்பதற்கு ஏற்றது. பித்தம், வாந்தி, கபம் சம்பந்தமான நோய்கள் வாயுத்தொல்லை, ரத்தத்தில் கலந்துள்ள விஷ அணுக்களை நீக்கி சுத்தம் செய்யக்கூடிய சக்தி தேனுக்கு உண்டு.
பொதுவாக தேனுடன் மருந்துகளை கலந்து கொடுப்பதால் ஜீரண பாதையில் தேன் சேர்த்து தயாரிக்கும் உணவுகள் மருந்து, நீண்ட நாள் கெடுவதில்லை. தேனில் சர்க்கரை சத்து அதிகமாக இருப்பதால் கடும் உழைப்பாளிகள், விளையாட்டு போட்டிகளில் ஈடுபடுவோர் அவ்வப்போது தேன் கலந்த பானம் பருகலாம்.
இதனால், உடலில் ஏற்படும் களைப்பு நீங்கும். தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய ரத்த நாளங்களை சீராக விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால், இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும். கண் நோய், தோல் நோய்களுக்கும் தேனை பயன்படுத்தலாம்.
For orders: https://dharaniherbbals.in/product-detail/wild-honey-250-gm

See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.
Comments

01/05/2024
 #செம்பருத்திஹேர்வாஷ்பவுடர் :செம்பருத்தி ஹேர்வாஷ் பவுடர் தலைமுடியை உண்மையில் இருப்பதை விட கருமையாக மாற்றுகிறது, பொடுகு ம...
30/12/2023

#செம்பருத்திஹேர்வாஷ்பவுடர் :
செம்பருத்தி ஹேர்வாஷ் பவுடர் தலைமுடியை உண்மையில் இருப்பதை விட கருமையாக மாற்றுகிறது, பொடுகு மற்றும் பேன்களை தடுக்கிறது மற்றும் முடியை மென்மையாகவும், பட்டுப்போகவும் செய்கிறது, மேலும் இது முடியை ஈரப்பதமாக்குகிறது.

# | |
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

 #தரணி_ஹெர்பல்ஸ் ஆவாரம் பூ பூசு மஞ்சள்- #பயன்கள்:உடல் சூடு குறையும்...முகம் பொலிவு மற்றும் புத்துணர்ச்சி பெறும்...முகச்ச...
23/12/2023

#தரணி_ஹெர்பல்ஸ் ஆவாரம் பூ பூசு மஞ்சள்- #பயன்கள்:

உடல் சூடு குறையும்...
முகம் பொலிவு மற்றும் புத்துணர்ச்சி பெறும்...
முகச்சுருக்கம் சரியாகும்...
தோல் மென்மையாகும்...
கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது...

போலி பொருட்களுக்கு மத்தியில் நிறைந்த தரத்துடன் - #தரணிஹெர்பல்ஸ் #புஞ்சைபுளியம்பட்டி...

Dharani Herbbals

Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti #நிவர்_புயல் See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

முகத்திற்க்கு  #புத்துணர்ச்சிதரும்  #சார்கோல்சோப்பு :கரித்தூள்(சார்க்கோல்) முகத்தில் உபயோகிக்கும் போது,முகத்தில் உள்ள தே...
08/12/2023

முகத்திற்க்கு #புத்துணர்ச்சிதரும் #சார்கோல்சோப்பு :
கரித்தூள்(சார்க்கோல்) முகத்தில் உபயோகிக்கும் போது,
முகத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்கும்,
கிருமி நாசினியாக செயல்படும்.
முகத்திற்க்கு பொலிவு தரும்.
மேலும் சருமத்தில் படிந்துள்ள தேவையற்ற நச்சுகளை நீக்கும்.

for orders: https://dharaniherbbals.in/product.../charcoal-soap-75-gm

| | | See less

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்  #தரணி_ஹெர்பல்ஸ்  #கபசுரகுடிநீர்...சளி, காய்ச்சல், இருமல், மூச்சுவிட சிரமப்படுதல் உள...
05/12/2023

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் #தரணி_ஹெர்பல்ஸ் #கபசுரகுடிநீர்...
சளி, காய்ச்சல், இருமல், மூச்சுவிட சிரமப்படுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவத்தில் கபசுரக் குடிநீரை சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் கபசுரக் குடிநீர் பெரும்பங்காற்றும் எனவும் சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
15-க்கும் மேற்பட்ட பாரம்பரிய மூலிகை பொருட்களை ஒன்றாக சேர்த்து கபசுர குடிநீருக்கான சூரணம் தயார் செய்யப்படுகிறது.

இதில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பொருளும் சளி, இருமல், சிரமமின்றி மூச்சுவிடுதல், ஆகியவைகளுக்கு கை கொடுத்து உதவும் என தெரிவிக்கப்படுகிறது.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் கொடிய வைரஸ்கள் உடலை ஆட்கொள்ள முடியாமல் செய்யலாம் என்பது சித்த மருத்துவர்களின் கருத்தாகும்.

காயகற்பம் மூலிகைகளை கொண்டு கபசுரக் குடிநீரை பருகுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
For Order : www.dharaniherbbals.in

See less

🔹ஆளிவிதையில (Flax seed) நார்சத்து அதிகம்.🔹இதை சரியான அளவில எடுத்துக்கிட்டா அதிகம் பசியெடுக்காது.🔹அது மட்டுமில்ல, உடல் எட...
16/10/2023

🔹ஆளிவிதையில (Flax seed) நார்சத்து அதிகம்.
🔹இதை சரியான அளவில எடுத்துக்கிட்டா அதிகம் பசியெடுக்காது.
🔹அது மட்டுமில்ல, உடல் எடையை கச்சிதமா வச்சிக்க உதவும்.
🔹இதுல இருக்குற நார்ச்சத்து உடல்ல கெட்ட கொழுப்பு சேர்றதை தடுத்து, இதய நோய், பக்கவாதம் வராம பாதுகாக்கும்.
🔹ஆளி விதையில லிக்னன்ஸ்’ (Lignans) அப்டின்னு ஒருவகை ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமா இருக்கு.
🔹இது செல்கள்ல செயல்பாட்டை அதிகமாக்கி, தேவையில்லாத கொழுப்பை எரிக்க உதவுகிறது.

| | | | See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

 #சிவப்புசந்தானம்- பயன்கள்முகத்தில் கரும்புள்ளிகள்.முக சுருக்கம்உடல் சுருக்கம்.தழும்புகள் நீங்கி சுத்தமாகவும் பொலிவுடன் ...
10/10/2023

#சிவப்புசந்தானம்- பயன்கள்
முகத்தில் கரும்புள்ளிகள்.
முக சுருக்கம்
உடல் சுருக்கம்.
தழும்புகள் நீங்கி சுத்தமாகவும் பொலிவுடன் வைத்துக்கொள்ள பயன்படுகிறது மேலும் இது சருமத்திற்க்கு தேவையான ஊட்டச்சத்து அளிக்கிறது.

| |
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

 #தரணி_ஹெர்பல்ஸ் ஆவாரம் பூ பூசு மஞ்சள்- #பயன்கள்:உடல் சூடு குறையும்…முகம் பொலிவு மற்றும் புத்துணர்ச்சி பெறும்…முகச்சுருக...
29/09/2023

#தரணி_ஹெர்பல்ஸ் ஆவாரம் பூ பூசு மஞ்சள்- #பயன்கள்:

உடல் சூடு குறையும்…
முகம் பொலிவு மற்றும் புத்துணர்ச்சி பெறும்…
முகச்சுருக்கம் சரியாகும்…
தோல் மென்மையாகும்…
கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது…

| | | | See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

குப்பை மேனி இலை கிடைக்க கூடாத பொருளும் அல்ல, இவை எளிதாக கிடைக்க கூடிய பொருளும் கூட என்பதால் இயற்கை அழகை விரும்புபவர்கள் ...
25/09/2023

குப்பை மேனி இலை கிடைக்க கூடாத பொருளும் அல்ல, இவை எளிதாக கிடைக்க கூடிய பொருளும் கூட என்பதால் இயற்கை அழகை விரும்புபவர்கள் குப்பை மேனியை மேனி அழகாக்க பயன்படுத்தலாம்.
வைட்டமின் சி நிறைந்தது என்பதால் இவை சருமத்தை சுருக்கமில்லாமல் பொலிவாக வைக்க உதவுகிறது.

உடலுக்கு ஆரோக்கியம் தரும்  #சிவப்புகவுனிஅரிசிபுரதச்சத்து நிறைந்தது.தாய்ப்பால் அதிகரிக்கும்.உடல் சூடு குறையும்.எடை குறைக்...
22/09/2023

உடலுக்கு ஆரோக்கியம் தரும் #சிவப்புகவுனிஅரிசி
புரதச்சத்து நிறைந்தது.
தாய்ப்பால் அதிகரிக்கும்.
உடல் சூடு குறையும்.
எடை குறைக்க உதவுகிறது.
குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் .

|

நீண்ட ஆயுளை கொடுக்கும் பாரம்பரிய அரிசி-  #கருப்பு_கவுனி...கருப்பு கவுனியின் பயன்கள்:உணவுக்குழாய் புற்றுநோயிலிருந்து பாது...
20/09/2023

நீண்ட ஆயுளை கொடுக்கும் பாரம்பரிய அரிசி- #கருப்பு_கவுனி...

கருப்பு கவுனியின் பயன்கள்:

உணவுக்குழாய் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.

உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் நிறைந்துள்ளது.

நாட்பட்ட நோய்களாகிய சர்க்கரை, புற்றுநோய், இதயக்கோளார் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கின்றது..

தேவையற்ற கொழுப்புக்களை கட்டுப்படுத்துகிறது.
அதிகமாக நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து நிறைந்தது.

 #முடக்கத்தான் -  #மருத்துவ_பயன்கள்: #முடக்கற்றான்இட்லிபொடி1. முடக்கத்தான் கீரையில் உள்ள சத்துக்கள்முடக்கத்தான் கீரையில்...
18/09/2023

#முடக்கத்தான் - #மருத்துவ_பயன்கள்:

#முடக்கற்றான்இட்லிபொடி

1. முடக்கத்தான் கீரையில் உள்ள சத்துக்கள்
முடக்கத்தான் கீரையில் அதிக அளவு நார்ச்சத்து, கால்சியம், புரதம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது.மேலும் இதில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் சத்துக்கள் அதிக அளவில் உள்ளது.

முடக்கற்றான் சித்தர் பாடல்:

சூலைப்பிடிப்பு சொறிசிரங்கு வன்கரப்பான்
காலைத் தோடுவலியுங் கண்மலமும் சாலக்
கடகத்தானோடிவிடுங் காசினியை விட்டு
முடக்கற்றான் தனை மொழி
-சித்தர் பாடல்
கீழ்பிடிப்பு, கிரந்தி, காரப்பான்,பாதத்தை பிடித்த வாதம் மலக்கட்டு,அத்தனையும் முடக்கற்றான் உபயோகித்தால் இந்த உலகை விட்டு ஓடிவிடுமாம்.

| | See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

 #மூலிகைதேநீர்  பருவ கால மாற்றங்களுக்கு ஏற்றது.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.சளி இருமல் குணமாகும் குரல் வளம் பலமாக...
15/09/2023

#மூலிகைதேநீர்
பருவ கால மாற்றங்களுக்கு ஏற்றது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
சளி இருமல் குணமாகும் குரல் வளம் பலமாகும்.
சுவாச கோளாறுகள் நீங்கும்.
கல்லீரலை பலப்படுத்தும்.
செய்முறை
400ml தண்ணீரில் 10 கிராம் பொடியை கலக்கி 200மேல் ஆகா சுண்ட காய்ச்ச வேண்டும்
உபயோகிக்கும் முறை
பெரியவர்களுக்கு 100ml
7 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு 50ml
7 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 30ml
|

09/09/2023


ஆவாரம்பூ சங்க காலம் முதலே பயன்படுத்தி வந்த பூ ஆகும் இதனை மடல் ம ஏறி வந்த தலைவன் சூடிக்கொண்டு வந்து தலைவனை கரம்பிடிக்க வருவதாக கூறப்படுகிறது.

குறிஞ்சிபாட்டில் 99 வகையான மலர்களில் அவரம்பூவும் ஒன்று.

ஆவாரை பூத்திருக்கச் சாவாரை காண்பது உண்டா? என்று பழமொழியும் உண்டு

ஆவாரம்பூ, அதன் சமூலம் அனைத்தும் உடலுக்கு பல வகையான நன்மைகளை அளிக்கவல்லது. தோல் நோய்களில் இருந்து சர்க்கரை நோய் வரை அனைத்திற்கும் மேல்பூச்சாகவும், உட்கொள்ளவும் பயன்படுகிறது.

|

சுக்கு மிளகு திப்பிலி ஆகிய மூன்றும் சேர்ந்ததே திரிகடுகம் ஆகும்.செரிமான பிரச்சனைகளை சரி செய்வதற்கு அதிக அளவில் பயன்படுகிற...
06/09/2023

சுக்கு மிளகு திப்பிலி ஆகிய மூன்றும் சேர்ந்ததே திரிகடுகம் ஆகும்.

செரிமான பிரச்சனைகளை சரி செய்வதற்கு அதிக அளவில் பயன்படுகிறது.

இருமல் சளி நெஞ்சு சளி தும்மல் தலைவலி போன்ற சளி சமந்தமான அணைத்து நோய்களையும் குணப்படுத்துவதற்கு இந்த திரிகடுகம் உதவுகிறது.

பசியின்மையை போக்கி பசியை தூண்டும்.

For orders: www.dharaniherbbals.in


See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

ரோஜா சோப்பு :ரோஜா சோப்புகளில் பல அழகு நன்மைகள் உள்ளன. அவை பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான்எதிர்ப்பு பண்புகளைக்...
04/09/2023

ரோஜா சோப்பு :
ரோஜா சோப்புகளில் பல அழகு நன்மைகள் உள்ளன. அவை பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான்எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.

இந்த சோப்புகள் சுருக்கங்கள் மற்றும் கோடுகளை குறைக்கிறது மற்றும் தோலின் வயதானதை மெதுவாக்கும்.

இது வறண்ட மற்றும் வயதான சருமத்திற்கும் சிகிச்சையளிக்கிறது.

இது நிறமி, சிவத்தல் மற்றும் வீக்கத்தை நீக்குகிறது மற்றும் அனைத்து வகையான தோல் நிறங்களுக்கும் நல்லது.

For orders: https://dharaniherbbals.in/product-detail/mahil-rose-soap

See less
— feeling happy in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

 #மதுரை-யின் சிறப்புகளுள் ஒன்றான தாழம்பூ குங்குமம் இப்போது நமது சொந்த தயாரிப்பில் தமிழகமெங்கும்...திவ்யம் தாழம்பூ குங்கு...
01/09/2023

#மதுரை-யின் சிறப்புகளுள் ஒன்றான தாழம்பூ குங்குமம் இப்போது நமது சொந்த தயாரிப்பில் தமிழகமெங்கும்...
திவ்யம் தாழம்பூ குங்குமம்....

# | | #தாழம்பூ
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

 #துவளைபொடிஇது பாரம்பரியமாக, பிறந்த குழந்தைகளுக்கு பயன்படுத்தி வந்த மூலிகை குளியல் பொடி ஆகும்.இதில் மருகு, மரிக்கொழுந்து...
21/08/2023

#துவளைபொடி

இது பாரம்பரியமாக, பிறந்த குழந்தைகளுக்கு பயன்படுத்தி வந்த மூலிகை குளியல் பொடி ஆகும்.

இதில் மருகு, மரிக்கொழுந்து, கஸ்தூரி மஞ்சள்,பூலாங்கிழங்கு,திருநீற்று பச்சிலை, வெட்டிவேர் வசம்பு மேலும் பல மூலிகைகள் கலந்துள்ளன.

இதில் நிறைய மூலிகைகள் உள்ளதால் குழந்தைகளின் மிருதுவான சருமத்திற்கு ஏற்றது.

குழந்தைகளுக்கு கிரீம்கள், சோப்புகள் , பயன்படுத்துவதை விட்டு விட்டு இந்த குளியல் பொடியை பயன்படுத்தினால் குழந்தைகளின் சருமம் மென்மையாகவும் நோய் எதிர்ப்பு தன்மையோடு இருக்கும்.

இந்த பொடியை பெண், ஆண் குழந்தை என்று அனைவர்க்கும் பயன்படுத்தலாம்.

for orders: https://dharaniherbbals.in/product-detail/thuvalai-powder

| See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

திருமஞ்சள் பொடி : அபிஷேகம் ,ஆராதனைகளுக்கு ஏற்றது .                           |     |
19/08/2023

திருமஞ்சள் பொடி :
அபிஷேகம் ,ஆராதனைகளுக்கு ஏற்றது .
| |

2 d  · கேழ்வரகு பயன்கள்:கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால், ஊட்டச்சத்து குறைபாடுகள், சிதைவு நோய்கள் போன்ற பல நோய...
04/08/2023

2 d ·
கேழ்வரகு பயன்கள்:
கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால், ஊட்டச்சத்து குறைபாடுகள், சிதைவு நோய்கள் போன்ற பல நோய்கள் உடலை அணுகாதவாறு பார்த்துக் கொள்ளலாம். உடலைக் குளிர்ச்சியாக்கும். உடலுக்கு வலுவையும் தரும். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு அரு மருந்து. அரிசி சாதத்துக்குப் பதிலாக இந்தக் கூழைக் குடித்துவந்தால், விரைவாக எடை குறையும்.

| | | | See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

 #முடக்கற்றான்இட்லிபொடிமுடக்கறுத்தான் கீரை சமீப வருடங்களாக மூட்டு வலிக்கு உதவும் மூலிகையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.வா...
01/08/2023

#முடக்கற்றான்இட்லிபொடி
முடக்கறுத்தான் கீரை சமீப வருடங்களாக மூட்டு வலிக்கு உதவும் மூலிகையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வாத நோய்கள்
மலச்சிக்கல், கரப்பான், கிரந்தி
தோல் நோய்கள்
மூல நோய்
காது வலி
மாதவிடாய் பிரச்சனைகள்.
என எல்லாவற்றிக்கும் தீர்வு அளிக்கிறது.
Dhanush | | |

முகப்பருக்களை போக்கும்  #முல்தானிமெட்டிமுல்தானி மெட்டி சருமத்தில் வடியும் அதிக எண்ணெய் பதத்தை உறிஞ்சி தெளிவான முகத்தோற்ற...
26/07/2023

முகப்பருக்களை போக்கும் #முல்தானிமெட்டி

முல்தானி மெட்டி சருமத்தில் வடியும் அதிக எண்ணெய் பதத்தை உறிஞ்சி தெளிவான முகத்தோற்றத்தை அளிக்கும். இதனால் பருக்கள், சருமச் சேதம் வராது.

முகம் பளபளப்பாகும்...

| | |
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Nalam nattu marunthu kadai, viralimalai. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Convenience Store?

Share