16/08/2023
உடலுக்கு ஆரோக்கியம் தரும் வரகு-முருங்கை இலை #பொங்கல்_மிக்ஸ்:
#வரகு_பயன்கள்:
* சர்க்கரை அளவை குறைக்கிறது.
* மூட்டுவலியை குறைக்க உதவுகிறது.
* கல்லீரலின் செயல்பாடுகளைத் தூண்டி, கண்
நரம்பு நோய்களைத் தடுக்கும் குணம் உண்டு
* நிணநீர் சுரப்பிகளைச் சீராக்கும்.
#முருங்கை_இலை_பயன்கள்:
* முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.
* இதில் வைட்டமின்கள் பி , சி, கே, புரோவிட்டமின் ஏ என்னும் பீட்டா கரோட்டின், மேலும் மாங்கனீசு, மற்றும் புரதம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கணிசமாக இருக்கிறது.
* முருங்கை இலையில் பாலாடையை விட 2 மடங்கு புரோட்டீன் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
* முருங்கைக் கீரையில் ஆரஞ்சை விட 7 மடங்கு வைட்டமின் சத்துக்கள் அதிகமாக உள்ளது.
* வாழைப்பழத்தை விட 3 மடங்கு பொட்டாசியம் சத்துக்கள அதிகமாக உள்ளது.
* முருங்கைக் கீரையில் கேரட்டை விட 4 மட்ங்கு வைட்டமின்-ஏ அதிகமாக இருக்கிறது.
* பாலை விட 4 மடங்கு கால்சியம் முருங்கை கீரையில் நிறைந்துள்ளது.
| | | |